முகப்பு /செய்தி /விளையாட்டு / Ashes 2021-22- இங்கிலாந்து அதிர்ச்சி; முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் பவுல்டு, ஜோ ரூட் டக் அவுட்

Ashes 2021-22- இங்கிலாந்து அதிர்ச்சி; முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் பவுல்டு, ஜோ ரூட் டக் அவுட்

ஹேசில்வுட் ஜோ ரூட்டை டக்கில் தூக்கினார்.

ஹேசில்வுட் ஜோ ரூட்டை டக்கில் தூக்கினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்பனில் பரபரப்பு தொடக்கம் கண்டது. டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்யத் துணிந்தது எதிர்மறையானது, முதல் பந்திலேயே இங்கிலாந்து இடது கை தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ், மிட்செல் ஸ்டார்க் பந்தில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆகி வெளியேறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்பனில் பரபரப்பு தொடக்கம் கண்டது. டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்யத் துணிந்தது எதிர்மறையானது, முதல் பந்திலேயே இங்கிலாந்து இடது கை தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ், மிட்செல் ஸ்டார்க் பந்தில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பிட்ச் பசுந்தரைப் பிட்ச், வானிலையும் மேகமூட்டத்துடன் பந்துகள் ஸ்விங் ஆவதற்குச் சாதகமாக உள்ளது, பந்துகள் எகிறுகின்றன, விளையாட முடியாத பந்துகளை ஹேசில்வுட்டும் கமின்ஸும் வீசுகின்றனர். பயங்கரமான பிட்ச். இதில் சர்வைவ் ஆனால் 2வது செஷன், 3வது செஷனில் ரன்கள் எடுக்கலாம் ஆனால் இங்கிலாந்து முதல் ஒருமணி நேரத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

தொடக்க வீரர் ஹசீப் ஹமீது சோம்பேறித்தனமாக ஆடுவதால் இன்னும் நிற்கிறார், அவர் 18 ரன்களுடனும், ஆலி போப் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். முன்னதாக ஆட்டம் தொடங்கி முதல் பந்து மிட்செல் ஸ்டார்க் வீச அது அருமையான லெக் ஸ்டம்ப் ஆஃப் வாலி அல்லது ஓவர் பிட்ச் பந்து பவுண்டரி அடிக்க வேண்டிய பந்தை காலைத்தூக்கி ஊர்ப்பட்ட தூரத்தில் போட்டதால் பந்தை ஆட முடியவில்லை லெக் ஸ்டம்ப் அடியைப் பெயர்த்தது பந்து, பர்ன்ஸ் டக் அவுட் பவுல்டு.

டேவிட் மலான் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்து ஒன்று கிராஸ் ஆக வந்து எழும்பியதில் மலானின் எட்ஜில் பட்டு அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனது. ஆட முடியாத பந்து. அதாவது ஆடியே ஆக வேண்டும் ஆடினால் எட்ஜ் ஆகும் என்ற ரகப்பந்து.

ஜோ ரூட் இறங்கியவுடன் ஆஸ்திரேலிய உடல் மொழியில் சூடுபிடித்தது, ஜோரூட்டுக்கு பிரமாதமாக வீசினார் கமின்ஸ், ஹேசில்வுட் இருவரும், ஹேசில் வுட் அவருக்கு மாறி மாறி வேறு வேறு கோணங்களில் இன்ஸ்விங்கர் அவுட் ஸ்விங்கர் என்று எழும்பும் பந்துகளுடன் வீசியதில் 9பந்துகள் ஆடி ரன் எடுக்க முடியாமல் கடைசியில் ஹேசில்வுட் பந்து ஒன்று ஆங்கிளாக உள்ளே வந்து லேசாக வெளியே எடுத்தது, ரூட் ஆடித்தான் ஆக வேண்டும், ஏனெனில் ஆடாமல் விட்டால் அது பவுல்டு ஆகிவிடும் போல்தான் இருந்தது, ஆனால் ஆடினால் எட்ஜ், அப்படித்தான் எட்ஜ் ஆனது, வார்னர் காத்திருந்து கொத்தினார் கேட்சை ரூட் டக் அவுட்.

Must Read : இவற்றை செய்யாவிட்டால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் : இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

அவருக்கு அடுத்து நீண்ட காலம் கழித்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தாலும் திருப்திகரமாக ஆடவில்லை, அவரை ஆடவிடவில்லை. போட்டு ஆட்டிவிட்டனர். கடைசியில் கமின்ஸ் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசி சற்றே எழுப்ப மீண்டும் ஸ்டோக்ஸ் ஆடித்தான் ஆக வேண்டும் ஆனால் ஆடினால் எட்ஜ் என்ற ரீதியில் ஆடினார் எட்ஜ் ஆகி லபுஷேனிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஜோஷ் ஹேசில்வுட் 7 ஓவர் 4 மெய்டன், 3 ரன் 2 விக்கெட். கமின்ஸ் 6 ஓவர் 2 மெய்டன் 16 ரன் ஒருவிக்கெட், ஸ்டார்க் 23 ரன் ஒருவிக்கெட்.

First published:

Tags: Ashes, Australia, Australia vs England