Home /News /sports /

Ashes| 2-வது டெஸ்ட்டுக்கு இங்கிலாந்து அணியில் உலகின் தலைசிறந்த தொடக்க பவுலிங் ஜோடி

Ashes| 2-வது டெஸ்ட்டுக்கு இங்கிலாந்து அணியில் உலகின் தலைசிறந்த தொடக்க பவுலிங் ஜோடி

ஆஷஸ் அடிலெய்ட் டெஸ்ட்: ஆண்டர்சன், பிராட் வருகை

ஆஷஸ் அடிலெய்ட் டெஸ்ட்: ஆண்டர்சன், பிராட் வருகை

டிசம்பர் 16ம் தேதி அடிலெய்டில் ஆஷஸ் தொடர் 2021-22-ன் 2வது டெஸ்ட் தொடங்குகிறது, இந்த பகலிரவு பிங்க் நிறப்பந்து டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவார்கள் என இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் அறிவித்துள்ளார்.

    டிசம்பர் 16ம் தேதி அடிலெய்டில் ஆஷஸ் தொடர் 2021-22-ன் 2வது டெஸ்ட் தொடங்குகிறது, இந்த பகலிரவு பிங்க் நிறப்பந்து டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவார்கள் என இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் அறிவித்துள்ளார்.

    உலகிலேயே சிறந்த தொடக்க பந்து வீச்சுக் கூட்டணியாகத் திகழும் பிராட், ஆண்டர்சன் தங்களிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களை பிரிஸ்பன் மைதானத்தில் வேண்டுமென்றே கேப்டன் ஜோ ரூட் உட்கார வைத்து ஒன்றுக்கும் உதவாத ஜாக் லீச்சை அணியில் எடுத்து வகையாக செம உதை வாங்கினார். இதிலிருந்து மீள நல்ல வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிடைத்துள்ளது, எப்படியெனில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட் இல்லை.

    இங்கிலாந்தின் தோல்விக்கு அந்த அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களாக செயல்பட்டு வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணியில் இல்லாததே காரணம் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. பகல்-இரவு போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டியில் பிராட் மற்றும் ஆண்டர்சன் விளையாடுவார்களா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட் கூறுகையில், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். அடிலெய்டு டெஸ்டில் இருவரும் விளையாடுவார்கள். அவர்கள் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். என்று சில்வர் வுட் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தான் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில்  தான் இருந்திருந்தால் என்று ஸ்டூவர்ட் பிராட் மெயில் ஆன் சண்டே என்ற பத்திரிகையில்  எழுதியிருப்பதாவது:

    “ஆஷஸ் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். கப்பாவில் பவுலிங் போடுவதை மிகவும் நேசிக்கிறேன். அந்தப் பிட்சில் நிச்சயம் என்னால் ஒரு நம்பிக்கைக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.

    அதுவும் என்னுடைய ரோல் என்னவென்று என்னிடம் கூறப்பட்ட வரையில் நான் 100% கப்பாவில் ஆட தயாரான மனநிலையில் இருந்தேன், மனத்தளவில் முழு தயாரிப்பில் இருந்தேன். புதிய பந்தில் வீசும் வீச்சாளனாக உயர் மட்ட கிரிக்கெட் போட்டிகளில் சிலபல நெருக்கடியான பந்துகளை வீச வேண்டும், அதற்கும் நான் தயாராகவே இருந்தேன்.

    Also Read: 25 பந்துகளில் 124 ரன்கள்- ரோகித் சர்மாவின் காட்டடியில் இலங்கை சிக்கியது இன்றுதான்

    ஆனால் என்னை உட்காரவைத்தது எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது, ஆஷஸ் தொடர் என்பது மாராத்தான் ஓட்டம் போன்றது, 100 மீ, 200மீ., ஸ்பிரிண்ட் அல்ல என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்” என்று தன் ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளார் பிராட்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22

    அடுத்த செய்தி