Home /News /sports /

Ashes 4th test 1st day- ஆஸ்திரேலியா 126/3, மழையால் ஆட்டம் பாதிப்பு

Ashes 4th test 1st day- ஆஸ்திரேலியா 126/3, மழையால் ஆட்டம் பாதிப்பு

ஆஷஸ் 4வது டெஸ்ட், சிட்னி.

ஆஷஸ் 4வது டெஸ்ட், சிட்னி.

ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது, மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 126 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது, மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 126 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் உஸ்மான் கவாஜா 4 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடும் மழையால் பாதிக்கப்பட்ட இந்த முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 46.5 ஒவர்கள்தான் வீச முடிந்தது.

    தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹரிஸ் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 72 பந்துகளை சந்தித்த வார்னர் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹரிஸ் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்து வீச்சில் வெளியேறினார்.

    இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபூஷேன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார் வுட் பந்து வீச்சில் பட்லரிடம் கேட் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளல்து. ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்னிலும், உஸ்மான் குவாஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    பிராட் வீசிய அந்தப் பந்து சற்றே வெளியே எடுக்க ஸ்டம்பில் வீசப்பட்ட பந்து ஆகையால் வார்னர் தொட்டார் பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கிராலி கையில் போய் உட்கார்ந்தது. 30 ரன்களில் 6 பவுண்டரிகளை விளாசியிருந்தார் வார்னர்.

    மார்கஸ் ஹாரிஸ் 38 ரன்கள் என்று பெரிய இன்னிங்ஸுக்கு நல்ல அடித்தளம் அமைத்திருந்த வேளையில் ஆண்டர்சன் வீசிய ஒரு பந்து சரியாக ஸ்டம்பில் லெந்தில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆக மீண்டும் எட்ஜ் ரூட் இந்த முறை சரியாகப் பிடித்தார்.

    இதையும் படிங்க: ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் ஒரு ‘ஹைப்’, ‘சின்னப்பையன்’என்று நிரூபித்த ரபாடா

    கடைசியாக மார்னஸ் லபுஷேன். 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் நல்ல வேகத்தில் எழும்பிய பந்து லபுஷேன் தொட்டார் பந்து பட்லர் கையில் போய் உட்கார்ந்தது. ஆஸ்திரேலியா ஆட்ட முடிவில் 126/3.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி