Home /News /sports /

Ashes 3rd test| போலண்ட் வரலாறு! 2 நாள் 45 நிமிடத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி- ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Ashes 3rd test| போலண்ட் வரலாறு! 2 நாள் 45 நிமிடத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி- ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

அறிமுக டெஸ்ட்டில் வரலாறு படைத்த ஆஷஸ் ஹீரோ போலண்ட் மற்றும் வெற்றிகர ஆஸி. அணி.

அறிமுக டெஸ்ட்டில் வரலாறு படைத்த ஆஷஸ் ஹீரோ போலண்ட் மற்றும் வெற்றிகர ஆஸி. அணி.

போலண்ட் வரலாறு! 2 நாள் 45 நிமிடத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி- ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. 31/4 என்று 3ம் நாளான இன்று தொடங்கிய இங்கிலாந்து 45 நிமிடங்களில் மீதி 6 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. 

மேலும் படிக்கவும் ...
    போலண்ட் வரலாறு! 2 நாள் 45 நிமிடத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி- ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.மெல்போர்னில் 31/4 என்று 3ம் நாளான இன்று தொடங்கிய இங்கிலாந்து 45 நிமிடங்களில் மீதி 6 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

    மிகக் குறைவான முன்னிலையில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா, இப்படி நடப்பது 5வது முறையாக இருக்கலாம்.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை 3-0 என்று கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா வென்று5-0 ஒயிட் வாஷ் வெற்றிக்கு இந்த வெற்றி முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.



    சமையலறையில் இப்பத்தான் உலை வச்சேன் அதுக்குள்ள ஆல் அவுட் ஆகிட்டாங்களா? ‘எனக்கும் ரெண்டு கைதான் இருக்கு’ என்று ஹெட் குக் புலம்பாத குறைதான். இங்கிலாந்துக்கு திட்டு எந்தப் பகுதியிலிருந்து வரும்னு சொல்ல முடியாது. வீரர்கள் வரும் பஸ் டிரைவர், ‘காலைல சீக்கிரமே எழுப்பி விட்டுட்டாங்க, கொஞ்சம் பஸ்லயே படுத்து தூங்கலாம்னா அதுக்குள்ள ஆல் அவுட் ஆகி மறுபடியும் எழுப்பி விட்டுட்டானுங்க, எனக்கு தெரியாது ரூட் அய்யாதான்பஸ்சை ஓட்டணும்’ என்று புலம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அறிமுக பவுலர் 32 வயது ஸ்காட் போலண்ட் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 2வது இன்னிங்சில் அதி சிக்கனமாக 4 ஓவர் 1 மெய்டன் 7 ரன் 6 விக்கெட் என்று வரலாறு படைத்தார், அறிமூக டெஸ்ட்டிலேயே 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள், கேமரூன் கிரீன், ஆண்டர்சன் ஆஃப் ஸ்டம்பை பெயர்த்து வெற்றி விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து 82 ரன்களை அடிக்க முடியாமல் 68 ரன்களுக்கு சுருண்டது.

    நேற்று அந்த 12 ஓவர் ஆட்டத்தில் ஸ்காட் போலண்ட் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதை இன்றும் தொடர்ந்தார். மொத்தமாக 21 பந்துகள்தான் அவருக்கு இங்கிலாந்தைக் காலி செய்ய தேவைப்பட்டது. 6 விக்கெட்டுகளை இதில் வீழ்த்தினார். இன்று காலை பென் ஸ்டோக்ஸ் ஒரு நேர் பவுண்டரி அடித்தார், ஆனால் அதே ஓவரில் ஸ்டார்க் ஓடி வந்து இன்ஸ்விங்கரை வீச வேகமாக வந்த பந்தில் ஸ்டோக்ஸ் பவுல்டு ஆனார். ஸ்டார்க் 3/29.

    Also Read: Ashes 2021 3rd test: இங்கிலாந்தை துவைத்துக் காயப்போட்ட அந்த 12 ஓவர்கள்

    ஜானி பேர்ஸ்டோ 18 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து போலண்ட் பந்தில் எல்.பி. ஆனார். ஜோ ரூட் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்த நிலையில் ஏதாவது கொஞ்சம் ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம் என்று யோசித்து போலண்ட் பந்தை நோக்கி பேட்டை விட்டார், ஆனால் பந்து அவரை விட்டால்தானே, வார்னர் கையில் தஞ்சமடைந்தது. கூகபரா பந்துகள் ‘இனிமே இங்கிலாந்து கூடத்தான் எங்களை யூஸ் பண்ணனும் அவங்கதான் அடிக்கவே மாட்டாங்க’ன்னு கோரிக்கை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    மார்க் உட், போலண்ட் பந்தை தடுத்தாடினார், ஆனால் பந்து போலண்ட் கையிலேயே கேட்ச் ஆகஉட்கார்ந்தது. இவர் டக், ஆலி ராபின்சன் எட்ஜ் ஆகி போய்க்கொண்டே இருந்தார், இவரும் டக். கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கேமரூன் கிரீன் பந்தில் பவுல்டு ஆக இங்கிலாந்து துவைத்து அலசி காயவைக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

    ஜோ ரூட் 10வது ஆஷஸ் டெஸ்ட் தோல்வியை கேப்டனாகச் சந்தித்துள்ளார்.

    சுருக்கமான ஸ்கோர் மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 267 ஆல் அவுட், இங்கிலாந்து 185 மற்றும் 68 ஆல் அவுட். 
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி