முகப்பு /செய்தி /விளையாட்டு / Ashes 2021 Adelaide test-சடங்கு முடிந்தது- இங்கிலாந்து படுதோல்வி- ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா 2-0

Ashes 2021 Adelaide test-சடங்கு முடிந்தது- இங்கிலாந்து படுதோல்வி- ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா 2-0

சாம்பியன் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை.

சாம்பியன் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை.

இங்கிலாந்து அணியில் 130 ஓவர்கள் ஆட முடியாமல் 11 வீரர்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது? ரூட்டுக்கு ரொம்ப கஷ்டம் தான், கேட்ச்களை சரியான நேரத்தில் விட்டது, தொடக்க வீரர்கள் தண்டமாக ஆடுவது, ரூட் மலானுக்குப் பிறகு ஆட ஆளில்லாமல் இங்கிலாந்து தவிப்பது ஆகியவற்றினால் 5-0 உதை காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஆஷஸ் தொடர் 2021-22-ன் 2வது, அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 468 ரன்கள் வெற்றி இலக்கை எதித்து ஆடிய இங்கிலாந்து 5ம் நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு தங்கள் 2வது இன்னிங்ஸில் 192 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலியாவுக்கு இந்த 2-0 மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 24 கணக்கில் சேர்ந்தது.

ஆஸ்திரேலியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் மிகப்பிரமாதமாக வீசி 19.1 ஓவர் 9 மெய்டன் 42 ரன்கள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க், நேதன் லயன் அச்சுறுத்தும் விதத்தில் வீசினர், இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நேசர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஸ்கோர் விவரம்: ஆஸ்திரேலியா 473/9 டிக்ளேர், 230/9 டிக்ளேர். இங்கிலாந்து 236 மற்றும் 192 ரன்கள். ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் போட்டியில் 211 ஓவர்க்ளை ஆடி 693 ரன்களை எடுக்க இங்கிலாந்து 197 ஓவர்கள் ஆடி 328 ரன்களை மட்டுமே எடுத்தது, உண்மையில் இப்படிப்பார்த்தால் மிகப்பெரிய தோல்விதான் இங்கிலாந்துக்கு. ஸ்மித் கேப்டன்சியில் அனைத்தும் கச்சிதமாக நடந்தது, களவியூகம் பவுலிங் சேஞ்ச், எதிரணியினருக்கு போடும் பிரஷர் என்று ஸ்மித் அசத்தினார், ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26ம் தேதி நடக்கும் போது ஒரிஜினல் கேப்டன் பாட் கமின்ஸ் வந்து விடுவார்.

விக்கெட்டுகள் எப்படி விழுந்தன:

அடிலெய்டில் 5ம் நாளான இன்று இங்கிலாந்து 82/4 என்று தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் இருந்தார். ஆலி போப் இறங்கினார். 4 ரன்கள் சேர்த்த நிலையில் ஆலி போப் தன் உடலுக்கு குறுக்கே சென்ற மிட்செல் ஸ்டார்க் பந்தை பேசாமல் விடுவதை விடுத்து போய் தொட்டார், தொட்டதனால் கெட்டார். 86/5.

ஸ்டார்க் பந்தில் அடிவாங்கிய ஜோ ரூட் அதன்பிறகு ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் தன் வழமையான அடித்து ஆடும் பாணியில் ஆடியிருந்தால் கூட கொஞ்சம் ஆஸ்திரேலியா பயந்திருக்கும், ஆனால் மிகவும் தற்காப்பு உத்தியுடன் ஆடினார், அது அவருக்கு அவ்வளவு உறுதியாக வரவும் இல்லை. நேதன் லயன் நெருக்கமாக பீல்டர்களை வைத்து விட்டு ஆட்டு ஆட்டென்று ஆட்டி விட்டார். எத்தனை நேரம் இப்படி தாங்கும், 77 பந்துகள் கொண்ட அவரது வேஸ்ட் இன்னிங்ஸில் கடைசியில் நேதன் லயனை ஒரு ஸ்லாக் ஸ்வீப் ஆடி பவுண்டரி அடித்து சிறிது நேரத்திற்கெல்லாம் அவரிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். 105/6.

கிறிஸ் வோக்ஸ் (44), ஜோஸ் பட்லர் (26) சேர்ந்து 61 ரன்கள் கூட்டணி அமைத்து சுமார் 31 ஓவர்களை ஓட்டினர், இந்தத் தருணத்தில் ஒருவேளை இங்கிலாந்து ஒரு அசாத்தியமான டிராவை செய்து விடுமோ என்ற நிலை கூட தோன்றியது, ஆனால் மீண்டும் ஸ்மித் புதிய பந்தை கச்சிதமாக எடுத்ததோடு ஜை ரிச்சர்ட்ஸனை கொண்டு வந்தார், அவர் செம வேகத்தில் ஒரு இன்ஸ்விங்கரை வீச காலை முன்னால் தூக்கிப் போடாமல் கிரீசில் இருந்த படியே ஆடி வோக்ஸ் பவுல்டு ஆனார். 166/7.

ஆலி ராபின்சன் ஒரு 39 பந்துகள் தாக்குப்பிடித்து 8 ரன்கள் எடுத்தார், ஆனால் ஓவர் டிபன்ஸ் ஆடியதால் ஸ்மித் பீல்டகளை உள்ளே கொண்டு வந்து கொண்டே இருந்தார், கடைசியில் நேதன் லயன் ரவுண்ட் த விக்கெட்டி ஒரு பந்தை குறுக்காக நேரே செலுத்த எட்ஜ் ஆனது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார் ராபின்சன், 178/8. ஜாஸ் பட்லர் உண்மையில் மாராத்தான் டிபன்ஸ் ஆடினார் மொத்தம் 258 நிமிடங்கள் நின்ற அவர் 207 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜை ரிச்சர்ட்ஸன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கிரீஸிற்குள் வெகு உள்ளாக நின்ற அவர் ஆஃப் சைடில் பந்தை அடிக்கும் முயற்சியில் ஸ்டம்பை மிதித்து விட்டார் பைல்கள் விழுந்தன ஹிட் விக்கெட் ஆனார், இங்கிலாந்து 182/9. கடைசியில் பிராட், ஆண்டர்சன் ஆடினர், இதில் ஆண்டர்சன் தைரியமாக எதிர்கொண்டார், பிராட் 3 ஸ்டம்புகளையும் காட்டிக் கொண்டு பயந்து பயந்து ஆடினார். கடைசியில் ஆண்டர்சன், ஜை ரிச்சர்ட்சன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 192 ரன்களில் முடிந்தது. இன்னும் 20 ஓவர்கள் பக்கம் இருந்தது.

இதையும் படிங்க: Year Ender 2021:நியூஸ் 18 கிரிக்கெட் நெக்ஸ்ட்டின் 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 அணி - ரிஸ்வான் முன்னிலை

top videos

    இங்கிலாந்து அணியில் 130 ஓவர்கள் ஆட முடியாமல் 11 வீரர்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது? ரூட்டுக்கு ரொம்ப கஷ்டம் தான், கேட்ச்களை சரியான நேரத்தில் விட்டது, தொடக்க வீரர்கள் தண்டமாக ஆடுவது, ரூட் மலானுக்குப் பிறகு ஆட ஆளில்லாமல் இங்கிலாந்து தவிப்பது ஆகியவற்றினால் 5-0 உதை காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England