கிரிக்கெட்டில் ஆளைக்கொல்லும் பந்துகளில் பவுன்சர், பம்ப்பர் மட்டுமல்ல பீமர் என்ற தலையை குறிவைக்கும் அல்லது நேராக முகத்தைக் குறிவைக்கும் ஒரு புல்டாஸ் ரக பீமர் பந்தும் ஒன்று. இன்று மார்க் உட் தனது மணிக்கு 150 கிமீ வேகப் பந்தை இப்படி தலையைக் குறிவைக்கும் பீமராக வீசினால் என்ன ஆகும்?

ஹெட்டைத் தாக்கும் பீமர்
ட்ராவிஸ் ஹெட் 195/5 என்று இருந்த ஆஸ்திரேலியாவை தனது அதிவேக சதத்தினால் மீட்டெடுத்து ஆஸ்திரேலியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 343/7 என்று 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் ஆஷஸ் வரலாற்றில் 3வது அதிவேக சதத்தை எடுத்தார், ஆடம் கில்கிறிஸ்ட் 57 பந்துகளில் ஒருமுறை விளாசிய சதம் முதலிடம் வகிக்கிறது, 2வது இடத்தில் 1902ம் ஆண்டு ஒரு வீரர் அடித்த சதம் உள்ளது, 85 பந்துகளில் இவர் அடித்த சதம் 3வது இடத்தில் உள்ளது இயன் போத்தம் அடித்த 87 பந்து ஆஷஸ் சதம் 4ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மார்க் உட் பவுன்சர் ஒன்றில் ட்ராவிஸ் ஹெட் முழங்கையில் நன்றாக ‘மட்’ என்று வாங்கினார். அதற்கு சிகிச்சையும் மாத்திரையும் எடுத்துக் கொண்டு கையில் கட்டும் போட்டுக் கொண்டு அடுத்த பந்தையே பேய்த்தனமாக பாயிண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு 85 பந்துகளில் சதம் எடுத்த பிறகு 105 ரன்களில் இருந்த போதுதான் இந்த ஆக்ரோஷ பீமரை இங்கிலாந்தின் மார்க் உட் வீசினார். லைவ்வில் அதைப் பார்க்கும்போது இன்னொரு பிலிப் ஹியூஸ் தருணமோ என்றுதான் மனதைப் பதைபதைக்க வைத்தது.
இந்த பீமர் பந்து நேராக முகத்தை நோக்கி வர ட்ராவிஸ் ஹெட் எம்பினார் ஆனால் பந்து கிளவ்வைத் தாக்கி நேராக பிறகு தாடையைத் தாக்கியது, அதிர்ச்சியில் கீழே சுருண்டு விழுந்தார் ஹெட், ஆனால் உடனேயே எழுந்து கொண்டார், மார்க் உட் மன்னிப்புக் கேட்டார், இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: Ashes 1st test| ஆஷஸ் வரலாற்றில் 3-வது அதிவேக சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் - 3வது நாளில் இங்கிலாந்தை பார்சல் செய்யுமா ஆஸ்திரேலியா?
ஃபாக்ஸ் கிரிக்கெட்டில் கமெண்டரி அளித்துக் கொண்டிருந்த மார்க் வாஹ் ‘என் வாழ்நாளில் பார்த்த மிக பயங்கரமான பீமர் ஆகும் இது, மிக மிக பயங்கரம். நல்ல வேளையாக அவர் எம்பி கையில் பட்டு தாடையில் பட்டது’ என்றார். பந்து பட்டு எழுந்த சத்தத்தை பார்த்தால் ரத்தம் சிந்தியிருப்பார் என்றே தோன்றியது.
உஸ்மான் கவாஜாவா டிராவிஸ் ஹெட்டா என்பதில் ட்ராவிஸ் ஹெட் வென்றார், ஆம் இடத்தையும் தான், ஆனால் இந்த பீமர் அவர் லைஃபை காலி செய்திருக்கும் கடவுள் புண்ணியத்தில் பிழைத்தார் என்றே கூற வேண்டும் என்கின்றனர் ஆஸ்திரேலியர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.