Home /News /sports /

ஆஷஸ் டெஸ்ட் : காயம் காரணமாக விலகினார் ஸ்டிவ் ஸ்மித்! ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஷஸ் டெஸ்ட் : காயம் காரணமாக விலகினார் ஸ்டிவ் ஸ்மித்! ரசிகர்கள் அதிர்ச்சி

ஸ்டிவ் ஸ்மித்

ஸ்டிவ் ஸ்மித்

ஆஷஸ் தொடரில் ஸ்மித் 142, 144, 92 ரன்கள் விளாசி சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

ஸ்டிவ் ஸ்மித் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஹெட்டிங்லேவில் நடைபெற உள்ள ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கையில் பலமாக தாக்கியது. காயம் காரணமாக அந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய முடியாமல் பாதியிலேயே ஸ்மித் விலகினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என ரசிகர்கள் உறுதியுடன் எதிர்பார்த்த நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால் ஹெட்டிங்லே டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஷ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் ஸ்மித் 142, 144, 92 ரன்கள் விளாசி சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்மித் மிகப் பெரிய சவாலாக இருந்து வந்தார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Ashes, Steve Smith

அடுத்த செய்தி