இங்கிலாந்தை புரட்டி எடுத்த ஸ்மித்... சச்சின் சாதனையும் அவுட்

news18-tamil
Updated: September 5, 2019, 9:28 PM IST
இங்கிலாந்தை புரட்டி எடுத்த ஸ்மித்... சச்சின் சாதனையும் அவுட்
ஸ்டிவ் ஸ்மித்
news18-tamil
Updated: September 5, 2019, 9:28 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் சதம் அடித்ததன் மூலம் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

காயம் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்ட்ன ஸ்டிவ் ஸ்மித் இந்த டெஸ்டில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொர்ப்பணமாக இருந்து வரும் ஸ்மித் இந்த போட்டியில் அவர்களை கலங்க வைத்துள்ளார்.


தொடக்க வீரர்கள் மார்கஸ் 13 ரன்னிலும் வார்னர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்மித் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்ட நேரம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்றும் ஸ்மித்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. இங்கிலாந்து அணயின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் ஸ்மித்தை அவுட்டாக்க முடியாமல் திணறினர். பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் தனது 26வது சதத்தை பதிவு செய்தார்.இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 26 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சினை ஸ்மித் முந்தியுள்ளார். முதல் இடத்தில் டான் பிராட்மேன் 69 இன்னிங்சில் 26 சதங்கள் விளாசினார். 2வது இடத்தில் ஸ்மித் 121 இன்னிங்சிலும் சச்சின் 136 இன்னி்ஙசிலும் விளாசி உள்ளனர்.

Also Watch

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...