ஆஷஸில் சுவாராஸ்யம்... பீச் பந்தையும் பவுண்டரிக்கு விளாசிய ஸ்மித்! வீடியோ

Ashes 2019 | England vs Australia | Steve Smith | மான்செஸ்டர் மைதானத்தில் காற்று பலபமாக வீசியதால் மைதானத்தில் பீச்சில் பயன்படுத்தப்படும் பந்து உள்ளே வந்தது

Vijay R | news18-tamil
Updated: September 5, 2019, 6:04 PM IST
ஆஷஸில் சுவாராஸ்யம்... பீச் பந்தையும் பவுண்டரிக்கு விளாசிய ஸ்மித்! வீடியோ
ஸ்டிவ் ஸ்மித்
Vijay R | news18-tamil
Updated: September 5, 2019, 6:04 PM IST
கிரிக்கெட் பந்தை பவுண்டரிக்கு விளாசுவதை நாம் அனைவரும் பாரத்திருப்போம், பீச் பந்தையும் பவுண்டரிக்கு விளாசிய சுவாரஸ்ய நிகழ்வு ஆஷஸ் தொடரில் நடைபெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

காயம் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்ட்ன ஸ்டிவ் ஸ்மித் இந்த டெஸ்டில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொர்ப்பணமாக இருந்து வரும் ஸ்மித் இந்த போட்டியில் அவர்களை கலங்க வைத்துள்ளார்.


தொடக்க வீரர்கள் மார்கஸ் 13 ரன்னிலும் வார்னர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஸ்மித் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்ட நேரம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

மான்செஸ்டர் மைதானத்தில் காற்று பலபமாக வீசியதால் மைதானத்தில் பீச்சில் பயன்படுத்தப்படும் பந்து உள்ளே வந்தது. காற்றின் வேகமாக காரணமாக பந்தும் அங்கும் இங்கும் அலைமோதியது. ஒரு கட்டத்தில் ஸ்டிவ் ஸ்மித் நோக்கி வர அந்த பந்தை வேகமாக தட்டி விடுவார். அது பவுண்டரி எல்லையை தாண்டி செல்லும்.



பீச் பந்தையும் புவண்டரிக்கு விளாசிய ஸ்மித்த இந்த வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Watch : ஆட்டோ விலையை விட இருமடங்கு அபராதம்.. ஷாக் ஆன ஆட்டோ ஓட்டுநர்

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...