முகப்பு /செய்தி /விளையாட்டு / Ashes 1st Test: 147 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; சாதனை படைத்த ஸ்டார்க்- கேப்டனாக கமின்ஸ் 5 விக்கெட்

Ashes 1st Test: 147 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; சாதனை படைத்த ஸ்டார்க்- கேப்டனாக கமின்ஸ் 5 விக்கெட்

ஆஷஸ் தொடர்: கேப்டனாக கமின்ஸ் சாதனை

ஆஷஸ் தொடர்: கேப்டனாக கமின்ஸ் சாதனை

கார்ட்னி வால்ஷ், அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் கமின்ஸ் முதல் போட்டியிலேயே கேப்டனாக 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஷஸ் தொடர் 2021-22-ன் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே கமின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க் முதல் பந்திலேயே கிளீன் பவுல்டு செய்து சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

கார்ட்னி வால்ஷ், அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் கமின்ஸ் முதல் போட்டியிலேயே கேப்டனாக 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோரி பர்ன்ஸை முதல் பந்திலேயே பவுல்டு செய்த வகையில் ஆஷஸ் தொடரின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 2வது பவுலர் ஆனார் மிட்செல் ஸ்டார்க்.

1936-ல் ஆஸ்திரேலியா பவுலர் எர்னி மெக்கார்மிக், இங்கிலாந்தின் ஸ்டான் வொர்த்திங்டன் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்தி சாதனை புரிந்ததையடுத்து இப்போது மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரின் முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸை பவுல்டு செய்து சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து சற்று முன் தேநீர் இடைவேளைக்கு முன்னரே 147 ரன்களுக்குச் சுருண்டது. உணவு இடைவேளைக்கு முன்னரே 4 விக்கெட்டுகளை இழந்து 59 என்று இருந்த இங்கிலாந்து அணி பிறகு ஹசீப் ஹமீது (25) விக்கெட்டை ஸ்மித் கேட்ச் மூலம் கமின்ஸிடம் இழந்தது.

Also Read: Ashes 2021: நேர்மையாக விளையாடு- கேரியிடம் தொப்பியை வழங்கி கில்கிறிஸ்ட் உணர்ச்சிகர அறிவுரை

ஜாஸ் பட்லர், ஆலி போப் இணைந்து ஸ்கோரை 112 ரன்களுக்கு கொண்டு சென்றனர், பட்லர் அதிரடி காட்டினார். அவர் 58 பந்துகளில் 39 ரன்களை 5 பவுண்டரிகள் மூலம் எடுத்து மிட்செல் ஸ்டார்க்கின் அற்புதமான பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். இங்கிலாந்தின் சிறந்த இன்னொரு பேட்ஸ்மென் ஆலி போப் இவர் 35 ரன்கள் எடுத்தார், ஆனால் கிரீன் போட்ட சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தை சரியாக புல் ஆடாமல் டீப்பில் ஹேசில்வுட்டின் டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

இதையும் படிங்க: ஐசிசியின் மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? - வார்னர், சவுதீ பெயர்கள் பரிந்துரை

 அதன் பிறகு கிறிஸ் வோக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுக்க, ஆலி ராபின்சன், மார்க் உட் ஆகியோரை கமின்ஸ் காலி செய்ய இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்டார்க், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை கழற்ற கேப்டன் கமின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். இங்கிலாந்து அணியில் முன்னதாக ரோரி பர்ன்ஸ், கேப்டன் ஜோ ரூட் டக் அவுட் ஆக, டேவிட் மலான் 6 ரன்களுக்கும் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களுக்கும் உணவு இடைவேளைக்கு முன்னரே அவுட் ஆகினர்.

First published:

Tags: Ashes 2021-22, Australia vs England, Pat Cummins