Home /News /sports /

Ashes 2021-22: 425 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா- சிக்சர்களில் புதிய சாதனை

Ashes 2021-22: 425 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா- சிக்சர்களில் புதிய சாதனை

டிராவிஸ் ஹெட் 152 ரன்கள்- 148 பந்துகள்

டிராவிஸ் ஹெட் 152 ரன்கள்- 148 பந்துகள்

பிரிஸ்பனில் நடைபெறும் ஆஷஸ் தொடர் 2021-22-ன் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 425 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கி உணவு இடைவேளையின் போது 23/0 என்று உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பிரிஸ்பனில் நடைபெறும் ஆஷஸ் தொடர் 2021-22-ன் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 425 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கி உணவு இடைவேளையின் போது 23/0 என்று உள்ளது.

    இன்று காலை 343/7 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 5பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். இவருக்கும் ட்ராவிஸ் ஹெட்டுக்கும் இடையே 85 ரன்கள் கூட்டணி ஏற்பட்டது, இங்கிலாந்தை மேலும் காயடித்தது. நேதன் லயன் தன் பங்குக்கு 15 ரன்களை 2பவுண்டரிகளுடன் எடுத்தார். ஸ்டார்க் டீப் ஸ்கொயர்லெக்கில் பர்ன்ஸிடம் கேட்ச் ஆகி வோக்ஸிடம் ஆட்டமிழந்தார்.

    ஒரு முனையில் ட்ராவிஸ் ஹெட்டை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவர் 112-லிருந்து 152 ரன்கள் என்று உயர்ந்தார், தன் இடத்தை சிமெண்ட் போட்டு ஒட்டிக்கொண்டார். இனி இவரை ஒன்றும் செய்ய முடியாது, உஸ்மான் கவாஜா வேண்டுமானால் மார்கஸ் ஹாரிஸ் இடத்துக்கு போட்டியிடலாம்.

    ட்ராவிஸ் ஹெட் ஆடிய விதம் ஆடம் கில்கிறிஸ்ட், சேவாக் ரகம், அதாவது 85 பந்துகளில் சதம் கண்ட அவர் 148 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 152 ரன்கள் விளாசியது இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சிதான். கடைசியில் மேலும் ரன்கள் சேர்க்க மார்க் உட் பந்தை ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் விளாசும் முயற்சியில் ஸ்டம்ப்களை இழந்து வெளியேறினார்.

    பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலியா 8 சிகர்களை அடிப்பது இதுவே முதல் முறை, முன்பு 2004-ல் 7 சிக்சர்களை நியூசிலாந்துக்கு எதிராக அடித்தனர். அப்போதுதான் கிளென் மெக்ரா பேட்டிங்கில் தன் ஒரே சிக்சரை அடித்தார், மேலும் இந்த இன்னிங்சில் மெக்ரா 61 ரன்கள் என்ற தன் அதிகபட்ச ஸ்கோரையும் எட்டியது நினைவுகூரத்தக்கது. நேதன் லயனையும் மார்க் உட் கழற்றினார். 104.3 ஓவர்கள் ஆடிய ஆஸ்திரேலியா 425 ரன்கள் என்று 278 ரன்கள் என்ற முன்னிலை பெற்றது.

    தப்பினார் ரோரி பர்ன்ஸ்:

    இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை கடும் நெருக்கடியில் தொடங்கிய போது முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே பவுல்டு ஆன ரோரி பர்ன்ஸ், இந்த முறை ஸ்டார்க்கின் முதல் ஓவரின் 6வது பந்தில் எல்.பி. ஆகி நடுவரும் கையை தூக்கி விட்டார். பர்ன்ஸ் அதிர்ஷ்டவசமாக ரிவியூ செய்தார். பந்து லைனில் தாக்கியது, இன்சைடு எட்ஜ் இல்லை. முழங்காலுக்கு மேலே என்பதால் பந்து ஸ்டம்புக்கு மேல் செல்லும் என்று தெரிந்தது, நாட் அவுட். தப்பினார் ரோரி பர்ன்ஸ், இல்லையெனில் king pair என்பார்களே அந்த வகையில் 2 இன்னிங்ஸ் டக் அடித்திருப்பார்.

    இதையும் படிங்க: ஆஷஸ் டெஸ்ட் 2ம் நாள் பயங்கரம்: தலையைக் குறிவைத்த பீமர்- அலறிய டிராவிஸ் ஹெட்

    பிறகு கமின்ஸின் ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை புல் ஆடும் போது பந்து காற்றில் ஸ்கொயர் லெக் பீல்டர் கைக்கு அருகே சென்றது, தப்பினார் ரோரி. கடைசியில் அவர் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுடனும், ஹசீப் ஹமீது 10 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இங்கிலாந்து 23/0. 255 ரன்கள் இருக்கிறது இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England

    அடுத்த செய்தி