Home /News /sports /

மோசமான ஃபார்மிற்கு இன்னும் ஒன்றிரண்டு மோசமான ஆட்டங்களே உள்ளன - கோலி குறித்து டிவில்லியர்ஸ்

மோசமான ஃபார்மிற்கு இன்னும் ஒன்றிரண்டு மோசமான ஆட்டங்களே உள்ளன - கோலி குறித்து டிவில்லியர்ஸ்

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

“ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் மோசமான பார்முக்கு இன்னும் ஓரிரண்டு மோசமான ஸ்கோர்களுக்கு அருகில்தான் இருக்கிறீர்கள். அது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து மீள்வது கடினம்.

    விராட் கோலி ஆட்டத்தில் பழைய சரளம் இல்லையென்றாலும் நம் மீடியாக்கள், பத்திரிகைகள் ஒரு அரைசதம் அடித்து விட்டால் ‘இதோ பார் பிறந்தது யுகப்புரட்சி’, ‘வந்து விட்டார் பார் ஃபார்முக்கு’ என்றெல்லாம் தண்டோரா போடும். காரணம் மீடியாக்கள் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார்களுக்கான சியர் லீடர்களாகவே இருக்கும் விமர்சனக் கண்ணோட்டம் அறவே இருக்காது, ஆனால் உண்மையை உணரும் ஒரு பிரமாதமான கிரிக்கெட் வீரருக்கு, கோலிக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நுண்ணுணர்வுடன் புரிந்து கொள்ளக் கூடிய திறன் இருக்கும்.

    யுவராஜ் சிங் ஓரிரு நாட்களுக்கு முன்பு சொன்னதுதான் சரியானது. தலைக்கு மேல் கத்தி தொங்கும் போது ஆட முடியாது, ஆனால் தோனி, விராட் கோலிக்கெல்லாம் இருக்கும் பாதுகாப்புக்கு இத்தனை வாய்ப்புகள், வசதிகள் இருக்கும் போது ஒரு அரைசதம் எடுப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் அந்த அரைசதம் அணியைத் தோற்கடித்திருந்தால் அதனால் என்ன பயன்?

    அத்தகைய நுண்ணறிவு உள்ள ஏ.பி. டிவில்லியர்ஸ் அப்படித்தான் ஏ.எஃப்.பி.செய்தி ஏஜென்சியில் பொதுவாக ஃபார்ம் பற்றியும் விராட் கோலிக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியும் கூறிஉள்ளார்.

    “ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் மோசமான பார்முக்குள் செல்ல இன்னும் ஓரிரண்டு மோசமான ஸ்கோர்களுக்கு அருகில்தான் இருக்கிறீர்கள். அது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து மீள்வது கடினம். நான் அதற்கு சதவீதக் கணக்கு கூற மாட்டேன். ஆனால் மனதும் மனதின் சக்தியும் ஆற்றலும்தான் இங்கு போராட்டக் களம்.

    ஒரே இரவில் மோசமான வீரராக ஆகி விட முடியாது, விராட் கோலிக்கும் இது தெரியும். எனக்கும் தெரியும். இப்படித்தான் நாம் நம் மனதை அமைத்துக் கொள்ள வேண்டும், இப்படித்தான் சிந்திக்க வேண்டும்.

    விளையாடும் போது தெளிந்த மனமும் புத்தாக்க சக்தியும் தேவை. அப்போதுதான் இதிலிருந்து வெளியே வர முடியும்” என்கிறார் டிவில்லியர்ஸ். ஓரிரவில் மோசமான பேட்டராகி விட முடியாது என்று டிவில்லியர்ஸ் சொன்னால் நம் ஊடகங்கள் உடனே கோலி பார்மில் தான் இருக்கிறார் என்று டிவில்லியர்ஸ் கூறுவதாக புரிந்து கொள்ளும். மாறாக அவர் கூறுவது என்னவெனில் கோலியினுடைய மோசமான பார்முக்கு ஒரு புரோசஸ் இருக்கிறது, தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது, அவரை நோக்கி அந்த மோசமான பார்ம் வந்து கொண்டிருக்கிறது என்கிறார் டிவில்லியர்ஸ்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: AB de Villiers, IPL 2022, Virat Kohli

    அடுத்த செய்தி