முகப்பு /செய்தி /sports / “இந்த கேட்சுக்காக அர்ஷ்தீப் சிங்கை விமர்சிக்காதீர்கள்” - கோலி, ஹர்பஜன் கருத்து

“இந்த கேட்சுக்காக அர்ஷ்தீப் சிங்கை விமர்சிக்காதீர்கள்” - கோலி, ஹர்பஜன் கருத்து

ரோஹித் ஷர்மா, அர்ஷ்தீப் சிங்

ரோஹித் ஷர்மா, அர்ஷ்தீப் சிங்

யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிக முக்கியமான கட்டத்தில் மிக முக்கியமான கேட்சை இந்திய இடது கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நழுவ விட்டார், மிக மிக சுலபமான கேட்சைப் பிடித்திருந்தால் பாகிஸ்தானை ஒருவேளை இந்தியா வீழ்த்தியிருக்கலாம், இதற்காக அர்ஷ்தீப் சிங் கடுமையாக கிண்டலுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார்.

விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில், “இது பெரிய போட்டி, சூழ்நிலைகளும் சற்று இறுக்கமாக இருந்தது. நெருக்கடியான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்கள் உங்களிடம் வருவார்கள்.. இளம் வீரர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும்' என்றார்

இந்தியாவின் சிறந்த பீல்டர் என்று விதந்தோதப்படும் ஜடேஜா கூட இங்கிலாந்தில் அலிஸ்டைர் குக்கிற்குக் கேட்சை விட அவர் பெரிய சதத்தை எடுக்க இந்தியா தோற்றது. இதை விட பாவம், பங்கஜ் சிங் என்ற ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் படாத பாடு பட்டு 30 வயதில் இந்திய அணியில் இடம் கிடைத்து குக் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை ஜடேஜா ட்ராப் கெட்ச் தட்டிப்பறித்தது. ஜடேஜாவை ஒருவரும் ‘ட்ரோல்’ செய்யவில்லை. ட்ரோலில் சிக்குபவர்கள் பாவம் விளிம்பு நிலையில் உள்ள கேதர் ஜாதவ், அர்ஷ்தீப் சிங் போன்றவர்களே என்பது துரதிர்ஷ்டமே.

Also Read:  பாகிஸ்தானுடன் இதனால் தான் தோற்றோம்..! தோல்விக்கு விளக்கமளித்த ரோஹித் ஷர்மா

இந்நிலையில் இந்த கேட்சுக்காக அர்ஷ்தீப் சிங்கை விமர்சிக்காதீர்கள் என்று ஹர்பஜன் சிங்கும், கோலியும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஹர்பஜன் சிங்: "யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்" என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.இதே போல பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Asia cup cricket, Harbhajan Singh, Virat Kohli