Home /News /sports /

அர்ஷ்தீப் சிங் ஒரு சாதாரண பவுலர்தான் - முன்னாள் பாகிஸ்தான் பவுலர் சீண்டல்...

அர்ஷ்தீப் சிங் ஒரு சாதாரண பவுலர்தான் - முன்னாள் பாகிஸ்தான் பவுலர் சீண்டல்...

(கோப்பு புகைப்படம்)

(கோப்பு புகைப்படம்)

இந்தியாவுக்கு எதிராக ஒருமுறை ஷார்ஜாவில் ஹாட்ரிக் எடுத்த பாகிஸ்தான் முன்னாள் ஸ்விங் பவுலர் ஆகிப் ஜாவேத், இந்தியாவின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர அர்ஷ்தீப் சிங் ஒரு சாதாரண பவுலர்தான் என்று கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியாவுக்கு எதிராக ஒருமுறை ஷார்ஜாவில் ஹாட்ரிக் எடுத்த பாகிஸ்தான் முன்னாள் ஸ்விங் பவுலர் ஆகிப் ஜாவேத், இந்தியாவின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரு சாதாரண பவுலர்தான் என்று கூறியுள்ளார். 

அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுத்தால் கூட புகழ்பெற்றிருக்க மாட்டார் போலிருக்கிறது, பாகிஸ்தான் வீரருக்கு கேட்சை விட்டதன் மூலம் பிரபலமாகிவிட்டார். அர்ஷ்தீப் சிங் ஒரு பொக்கிஷமான பவுலர்தான், மூன்று வடிவங்களுக்குமான ஒரு பவுலர் அர்ஷ்தீப் சிங்.  ஒருகாலத்தில் ரஜீந்தர் சிங் காய் என்று ஒரு வேகப்பந்து பவுலர் வந்தார் பயங்கரமாக இன்ஸ்விங்கர் போடுவார், ஆனால் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இப்போது அர்ஷ்தீப் சிங்கிடம் நிறைய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பவுலர் ஆகிப் ஜாவேத் ஸ்போர்ட்ஸ் பாக்.டிவியில் கூறும்போது, “அர்ஷ்தீப் சிங் ஒரு சாதாரண அடிப்படை பவுலர். டி20 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் போல் ஸ்விங் செய்யும் பவுலர் வேண்டும் இல்லையெனில் வேகமாக வீசுபவர் வேண்டும். அல்லது பவுன்சர்களை வீசும் அளவுக்கு உயரமாக இருக்க வேண்டும்.

அதாவது ஒரு பவுலர் என்றால் ஒரு ட்ரேட்மார்க் வேண்டும், உலக பவுலர்களிடம் நீங்கள் இந்த ட்ரேட்மார்க்கை பார்க்க முடியும். உதாரணமாக ஜஸ்பிரித் பும்ரா யார்க்கர்களை துல்லியமாக வீசுகிறார். ஹர்திக் பாண்டியாவின் பவுன்சர்கள் ஒரு பெரிய ஆயுதம்.

ஷாஹின் அப்ரீடியிடம் பெரிய ஸ்விங் உள்ளது, ஹாரிஸ் ராவுஃபிடம் வேகம் உள்ளது. ஆகவே அர்ஷ்தீப் சிங்கிடம் இது போன்ற சிறப்பம்சம் எதுவும் இல்லையே. மற்ற சாதாரண பவுலர்கள் போல்தான் அவரும். அவரிடம் ட்ரேட்மார்க் இல்லை. எதிரணியினர் இவரைப் போன்ற பவுலர்கள் பற்றி சிந்திக்கக் கூட மாட்டார்கள், அதாவது இவர் இருக்கிறார், நாம் எச்சரிக்கையாக ஆட வேண்டும் என்று எதிரணியினர் சிந்திக்கும் பவுலர் அல்ல அர்ஷ்தீப் சிங் என்றார்.
Published by:Ramprasath H
First published:

அடுத்த செய்தி