முகமது சமிக்கு எதிராக பிடியாணை! 15 நாளில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் முகமது சமியின் மனைவி ஹசின் ஜஹான், தன்னை வீட்டில் அடைத்து துன்புறுத்துவதாக சமி மீது காவல்துறையில் புகார் அளித்தார்.

news18
Updated: September 2, 2019, 8:54 PM IST
முகமது சமிக்கு எதிராக பிடியாணை! 15 நாளில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
முகமது சமி
news18
Updated: September 2, 2019, 8:54 PM IST
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 15 நாள்களில் ஆஜராகவில்லையென்றால் கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் முகமது சமி. தற்போது, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறார். இந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் முகமது சமியின் மனைவி ஹசின் ஜஹான், தன்னை வீட்டில் அடைத்து துன்புறுத்துவதாக சமி மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது மீது இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஹசின் ஜஹான் தொடர்ந்து பொதுவெளியிலும் முகமது சமிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துவந்தார்.


ஹசின் ஜஹான் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் இதுவரையில் சமி ஆஜராகவில்லை என்று குற்றம்சுமத்தியுள்ளது. அடுத்து வரும் 15 நாள்களுக்கு முகமது சமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also see:

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...