ஸ்டெம்ப்பை காலி செய்த மாஸ் பந்துவீச்சு... கெத்து காட்டிய அர்ஜூன் டெண்டுல்கர்

Vijay R | news18
Updated: June 18, 2019, 11:30 PM IST
ஸ்டெம்ப்பை காலி செய்த மாஸ் பந்துவீச்சு... கெத்து காட்டிய அர்ஜூன் டெண்டுல்கர்
பந்துவீசும் அர்ஜூன் டெண்டுல்கர்
Vijay R | news18
Updated: June 18, 2019, 11:30 PM IST
லார்ட்ஸ் மைதானத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய பந்து பேஸ்ட்மேனிடம் சிக்காமல் நேரடியாக ஸ்டெம்ப்பை பதம்பாரத்து தெறித்தது.

கிரிக்கெட்டில் தகர்க்க முடியாத பல சாதனைகளைகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். சச்சினுக்கு இந்தியா மட்டுமின்று உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். சிறந்த பேஸ்ட்மேனாக வலம் வரும் சச்சின், அவ்வப்போது சுழற்பந்து வீசி விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

கிரிக்கெட்டில் இவருக்கு மாறாக களமிறங்கி உள்ளார் அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இடது கைபேட்டிங், இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அவர் உள்ளார். 2018ம் ஆண்டு இந்திய அணிக்காக U19 அணியிலும் இடம் பெற்றார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஜூன் டெண்டுல்கர்.

தற்போது எம்.சி.சி யங் கிரிக்கெட் (MCC Young Cricketers) அணியில் இடம் பெற்றுள்ள அர்ஜூன் டெண்டுல்கர், சர்ரே (Surrey 2nd XI ) அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். இந்த போட்டியில் அவர் வீசிய பந்துவீச்சில் சிக்கி சர்ரே அணி பேஸ்ட்மேன் க்ளின் போல்ட் ஆவார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.இந்த பதிவை பார்த்த பலர் அர்ஜூன் டெண்டுல்கரின் அபாரமான பந்துவீச்சை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் 11 ஓவர்கள் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் 50 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Also Read :அடுத்தப் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இவர் தான்?

Also Read :காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

Also Watch

First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...