Home /News /sports /

முகமது ஷமி, உம்ரான் மாலிக் இந்திய அணியில் ஏன் இல்லை? ரசிகர்கள் கடும் விவாதம்

முகமது ஷமி, உம்ரான் மாலிக் இந்திய அணியில் ஏன் இல்லை? ரசிகர்கள் கடும் விவாதம்

ஷமி - உம்ரான் மாலிக்

ஷமி - உம்ரான் மாலிக்

அர்ஷதீப் சிங்கிற்கு பதிலாக சீனியரான முகமது ஷமிக்கோ அல்லது ஐபிஎல்லில் நன்றாக விளையாடிய உம்ரான் மாலிக்கிற்கோ ஏன் வாய்ப்பளிக்கவில்லை என பலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு பெற்ற அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.  அதில் இஸ்லாமிய வீரர்கள் ஒருவர் கூட இல்லாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து உலகக்கோப்பைக்கான அணியில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது.



    டி20 உலகக்கோப்பையில் காயம் காரணமாக  ஜடேஜா  இடம்பெறவில்லை.  அவருக்குப்  பதில்  அக்சர்  படேலுக்கு  வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆவேஷ் கான், பிஷ்னோய்ற்கு பதிலாக ஆசியக் கோப்பையில் காயாம் காரணமாக விளையாடாத  பும்ரா, ஹர்ஷல் படேல் அணிக்குத் திரும்பி வந்துள்ளனர்.

    Also Read : டி20 உலகக்கோப்பை: வலுவான இந்திய அணி அறிவிப்பு

    முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். இந்த அணிக்குத் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. கடந்த ஐபிஎல்லில் அதிவேக பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறவைத்த உம்ரான் மாலிக் இந்த  அணியில் இடம்பெறவில்லை. சீனியரான  ஷமியே  காத்திருக்கும் வீரராகத் தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.







    அர்ஷதீப் சிங்கிற்கு பதிலாக சீனியரான முகமது ஷமிக்கோ அல்லது ஐபிஎல்லில் நன்றாக விளையாடிய உம்ரான் மாலிக்கிற்கோ ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனப் பலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் சிராஜ் அணியில் சேர்த்திருக்கலாம் எனவும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் இன்னும் சிலரோ அணியில் இடது கை பந்துவீச்சாளர் தேவை என்பதால் அர்ஷதீப் சிங் அணிக்கு உதவுவார். ஆசியக் கோப்பையிலும் கூட அர்ஷதீப் சிங் இறுதி நேரத்தில் நன்றாகவே பந்துவீசினார். அணியில் எந்த வித பாகுபாடும் இல்லை என தங்களது கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Indian cricket team, Mohammed siraj, T20 World Cup

    அடுத்த செய்தி