தோனியின் வேர்ல்ட் கப் சிக்ஸரை இப்ப பார்த்தாலும் சிலிர்க்கிறது - ஆனால் அன்று..10 வருட ப்ளாஷ் பேக்

தோனி

2011 உலகக்கோப்பை பைனலில் மும்பை வான்கடேவில் ஜெயவர்த்தனே சென்சூரி அடிக்க இலங்கை அணி 274 ரன்களை எடுத்தது.

 • Share this:
  2011 மார்ச் மாதம் ப்ளஸ் டூ இறுதித்தேர்வு போயிட்டு இருந்தது. கிரிக்கெட் ஃவேர்ல்ட் கப் மேட்சும் அப்பத்தான் நடந்தது. தேர்வு நடந்தததால் லீக் மேட்ச் எல்லாம் பார்க்க முடியாது. டிவி இருந்தா பையன் படிக்கமாட்டாங்கன்னு கேபிள் கட் பன்னிடுவாங்க. 2கே கிட்ஸ் மாதிரி கையில ஸ்மார்ட் போன் எல்லாம் கிடையாது. லேண்ட் லைன் போன் கலாச்சாரம் முடிஞ்சு அப்பதான் நோக்கியா,மோட்டோரோலா, சாம்சங் போன் வந்துக்கிட்டு இருந்தது. அப்ப எல்லாம் நோக்கியா 1100 போன் தான் எல்லாரும் வீட்டுலயும் இருக்கும். ஆண்ட்ராய்டு போன் எல்லாம் எங்கயாவது ஒருத்தர்கிட்ட தான் இருக்கும். இப்பமாதிரி டேட்டா, போன் கால் ஃப்ரி எல்லாம் கிடையாது. அப்ப எல்லாம் இன்கம்மிங் காலுக்கே காசு கட்டனும். ஃப்ரீ எல்லாம் அப்புறம்தான் வந்தது. ரேடியோவுல மேட்ச் லைவ் கேட்கலாம்.

  வீட்டுல கலரு டிவி வந்ததும் ரேடியோ பரணுக்கு போய்டுச்சு. சரி மேட்ச் ரிசல்ட லைவாக கேட்கலாமன்னு ரேடியோவ தேடி எடுத்தா எலி தன் கைவரிசையை காட்டி இருந்தது. அப்ப எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் அடுத்த நாள் காலையில வர்ற தினசரி நாளிதழ் பார்த்து மேட்ச் ரிசல்ட் தெரிஞ்சுக்கிறதுதான். மேட்ச் ரிசல்ட் காதுக்கு வந்தாலும் பேப்பர்ல படிக்கும்போது அப்படியே மேட்ச் லைவா பார்க்குற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். 7 மணிக்கு வர்ற பேப்பர் போடுற அண்ணனுக்கு வெயிட் பன்னிட்டு இருந்தா. அவரு ஊர் அரசியல் எல்லாம் பேசிட்டு பொறுமையா வந்து சேர்வார். விளையாட்டு செய்திகள் பக்கத்தை திருப்பி மேச்ட் ரிசல்ட் ஃபுல்லா படிச்சாதான் ஒரு திருப்தி கிடைக்கும்.

  ஜெயவர்த்தனே


  மார்ச் கடைசியில பரீட்சை எல்லாம் முடிஞ்சது. எனக்கு முன்னாடி எங்க வீட்ல கேபிள் கார அண்ணன கூப்பிட்டு டிவிக்கு கேபிள் கனெக்‌ஷன் கொடுத்துட்டாங்க. கிரிக்கெட் மேல அவங்களுக்கு ஒன்னும் அவ்ளோ ஆர்வம் கிடையாது. 4 மாசமா சீரியல் பார்க்கலையாம் அதான் இந்த ஸ்பீடு. இந்தியாவும் பைலனுக்கு வந்துடுச்சு. அந்த நாள் ஏப்ரல் -2 மும்பை வான்கடே மைதானமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இலங்கைதான் முதலில் பேட்டிங் ஆடியது. ஜெயவர்த்தனே சென்சூரி அடிக்க இலங்கை அணி 274 ரன்களை விளாசியது. இந்தியாவுக்கு 275 ரன்கள் டார்கெட். 28 வருஷத்துக்கு அப்புறம் உலகக்கோப்பை கையில் ஏந்த கிடைத்த அருமையான சந்தர்ப்பம். ஆனா 250 ப்ளஸ் ஸ்கோர் சேஸிங் பண்றது எல்லாம் அப்ப அவ்ளோ ஈஸி கிடையாது. ஒரு பக்கம் யார்கர் மன்னன் மலிங்கா, இன்னொரு பக்கம் சூழல் ஜாம்பவான் முரளிதரன் வேற லேசான கிலியை ஏற்படுத்தினர்.

  சேவாக், கம்பீர், சச்சின்,கோலி, யுவராஜ், தோனி என இந்தியா பேட்டிங் லைன் அஃப் கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது. முதல் ஓவரின் 2வது பந்திலே சேவாக்கை காலி செய்தார் மலிங்கா. ஏண்டா கேபிள் கனெஷ்சன் வாங்குனோம்னு ஆச்சு. என்னடா இந்தியா ஜெயிச்சுடுமான்னு நண்பன் வேற கமெண்ட், அவன் சும்மா தூக்கி போடுற பந்தையே அடிக்க மாட்டான் அவன் எல்லாம் கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான்.  அடுத்து வந்த கம்பீர் முதல் பந்திலே ஒரு பவுண்டரியை விளாசி கொஞ்சம் ஆறுதல் படுத்தினார். கம்பீர் அட்டாக்கிங் செய்துக்கொண்டிருந்தார்.

  கவுதம் கம்பீர். | கோப்புப் படம்


  ரெண்டு பந்துகளை பவுண்டரி லைனுக்கு விரட்டினார் சச்சின். வான்கடே மைதானத்தில் சச்சின்.. சச்சின்.. என்ற சத்தத்தை கேட்க முடிந்தது. கம்பீர் தொடர்ந்து அட்டாக்கிங் செய்துக்கொண்டிருந்தார்.    7வது ஓவரை வீச வந்த மலிங்கா சச்சினை  காலி செய்தார் . ‘நான் கூட இந்த பால் ஆடுவேன் மாப்ள’ பக்கத்துல இருக்குறவன் கமெண்ட்ரி வேற தாங்கமுடியல. அதன்பின்னர் கம்பீர் - கோலி பார்ட்னர்ஷிப் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. இந்தியாவின் ரன்னும் 100-ஐ தாண்டியது. இதற்கிடையில் கோலி விக்கெட்டாகி பெவிலியன் திரும்பினார். வேர்ல்ட் கப் சீசனில் யுவராஜ் நல்ல ஃபார்மில் இருந்தார். 3-வது டவுனில் யுவி வந்து விளாசுவார் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது . திடிரென தோனி மைதானத்திற்குள் களம் புகுந்தார். என்னுடைய சாய்ஸூம் தோனியாக தான் இருந்தது. தோனி தான் வரவேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தேன். கிரிக்கெட் குறித்த பெரிய புரிதல் இல்லையென்றாலும் தோனியின் ரசிகனாக அவருடைய ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல்  இருந்தது.

  தோனி முன்னரே களம்காண்கிறார் கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா என்ற கேள்வி கமெண்ட்ரியில் இருந்து வந்தது. இன்று நாம் எல்லோரும் தோனியின் ஃபினிஷிங் சிக்ஸரை கொண்டாடினாலும் யுவிக்கு முன்பு தோனி வந்ததை அன்றும் யாரும் பெரிதாக ரசித்திருக்க மாட்டார்கள்.அந்த தொடரில் தோனி பெரிய இன்னிங்ஸ் ஆடாததே அதற்கு காரணம். அந்த தருணத்தில் ஒட்டுமொத்த குரலும் தோனிக்கு எதிராக தான் இருந்து இருக்கும்.

  களத்தில் கம்பீர் இருந்ததால் லெஃப்ட், ரைட் காம்போவா இருக்கும் என தோனி களம் புகுந்தார். தோனி தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்கவில்லை. பயிற்சியாளர், சீனியர் வீரர்களுடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்தது பின்னர் தெரிந்தது. ஆனால் அந்த தருணத்தில் தோனி தன்னை முன்னிலைப்படுத்தவே களம் இறங்கினார் என்ற விமர்சனங்களும்  அப்போது எழுந்தது.

  இது எல்லாம் கொஞ்ச நேரம்தான் அதன்பின்னர் தோனி பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். சைனஸ் பிரச்னையால் அவதிப்பட்ட தோனி மிகவும் சிரமப்பட்டே அன்று விளையாடினார். இந்தியா மெல்ல வெற்றிப் படியை நோக்கி நகர்ந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கம்பீர் சதத்தை பூர்த்தி செய்யாமல் 97 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். மேட்ச் இந்தியா பக்கம் திரும்பி இருந்தது. அதன்பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங், தோனிக்கு நல்ல பார்ட்டனர் ஷிப் கொடுத்தார்.

  மும்பை வான்கடே மைதானம் வெற்றிக்கொண்டாட்டத்துக்கு தயாராகி கொண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க சிக்ஸரை விளாசினார் தோனி. கமெண்ட்ரியில் இருந்து ரவி சாஸ்திரி உற்சாகமான குரலில் தோனி தன்னுடைய ஸ்டைலில் ஆட்டத்தை முடித்துவிட்டார்.  28 வருடங்களுக்கு பிறகு இந்தியா உலகக்கோப்பையை ஏந்துகிறது” என்றார். வான்கடே மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். சச்சினை தோளில் தூக்கி சுமந்தது இந்தியப்படை தோனி கதாநாயகானார். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற தினம் இன்று.
  Published by:Ramprasath H
  First published: