மைதானத்தில் கேமரா முன் க்யூட் டான்ஸ் போட்ட அனுஷ்கா சர்மா! வைரல் வீடியோ

ICC World Cup 2019 | Anushka Sharma | போட்டியை ரசித்து கொண்டிருந்த அனுஷ்கா சர்மா க்யூட்டாக தலையசைத்து டான்ஸ் ஆடினார்.

மைதானத்தில் கேமரா முன் க்யூட் டான்ஸ் போட்ட அனுஷ்கா சர்மா! வைரல் வீடியோ
அனுஷ்கா சர்மா
  • News18
  • Last Updated: July 7, 2019, 6:32 PM IST
  • Share this:
இந்தியா - இலங்கை போட்டியின் போது அனுஷ்கா சர்மா க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலி மைதானத்தில் வெற்றி வீரராக வலம் வருகிறார் என்றால் அவரது மனைவி அனுஷ்கா சர்மா தற்போது இணையத்தில் பலரின் மனதை வென்றுள்ளார். இங்கிலாந்து போட்டியில் இருந்து விராட் கோலி மனைவி அனுஷ்கா மைதானத்தில் போட்டியை ரசித்து வருகிறார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது ரசிகர்களுடன் இணைந்து அனுஷ்கா சர்மாவும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார்.


இலங்கைக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது போட்டியை ரசித்து கொண்டிருந்த அனுஷ்கா சர்மா க்யூட்டாக தலையசைத்து டான்ஸ் ஆடினார். கேமராவில் இவரது டான்ஸ் பதிவானதை பார்த்த அனுஷ்கா  தொடர்ந்து க்யூட்டான போஸ்களை கொடுத்து அசத்தினார்.கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஷ்கா சர்மாவின் ரசிகர்களும்  தங்களது கருத்துகளை பதிவிட்டு இந்த வீடியோவை டிரோல் செய்து வருகின்றனர்.

Also Watch

First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்