ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

விராட் - அனுஷ்கா

விராட் - அனுஷ்கா

 • 1 minute read
 • Last Updated :

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி இவர்கள் திருமணம் இத்தாலியில் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அனுஷ்கா சர்மா திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா லாக்டவுனில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.. அவர்களின் முதல் குழந்தை இந்த வருடம் ஜனவரியில் வரவேற்க உள்ளதாகாவும் தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை தொடங்கி உள்ளோம்“ என்றுள்ளார்.

  விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் கர்பக்காலத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து பாதியில் திரும்பினர். இது தொடர்பாக பிசிசிஐ-யிடம் முறையான விடுமுறை விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Virat Kohli