சர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா... ஆச்சரியத்தில் அசந்து போன விராட் கோலி

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியை ஒரே மூச்சில் தூக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் விராட் கோலி - அனுஷ்கா சர்மா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் பொதுவெளியில் எடுத்து கொள்ளும் கியூட் போட்டாவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

  இதனிடையே அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் விராட் கோலியை ஒரே மூச்சாக அப்படியே தூக்கி காண்பித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  அனுஷ்கா சர்மா தன்னை தூக்குவார் என்பதை சற்று எதிர்பாராத விராட் கோலி ஆச்சரியத்தில் வியந்து போனார். மீண்டும் ஒரு முறை தூக்க விராட் சொல்ல, அனுஷ்காவும் மீண்டும் கோலியை தூக்கி வியப்படைய வைத்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)


  இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளதோடு லைக்ஸ் மற்றும் கமெண்ட்களையும் அள்ளி வருகிறது. ஐ.பி.எல் தொடர் நாளை தொடங்க உள்ளதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி தீவிர பயிற்சியில் உள்ளார்.
  Published by:Vijay R
  First published: