கோலியின் குதூகலத்துக்கு இதுதான் காரணம்? - வெளியானது ரகசியம்

#AnushkaSharma Presents In #Adelaide | அனுஷ்கா சர்மா, டெஸ்ட் போட்டியைப் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. #AUSvIND

news18
Updated: December 7, 2018, 2:59 PM IST
கோலியின் குதூகலத்துக்கு இதுதான் காரணம்? - வெளியானது ரகசியம்
அனுஷ்கா சர்மா & விராட் கோலி
news18
Updated: December 7, 2018, 2:59 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் கேப்டன் வீராட் கோலியின் புதிய உற்சாகத்திற்கான காரணத்தை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. நேற்று (06.12.18) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. புஜாராவின் அசத்தலான சதத்தால் இந்திய அணி 250 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

2-ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பொறுமையாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். இன்றைய ஆட்டநேர முடிவில், அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.இன்றைய ஆட்டத்தின்போது, கேப்டன் விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோசமாக காணப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் ஒவ்வொரு விக்கெட்டும் விழும்போது, கோலி புதிய உற்சாகத்தில் இருந்தார்.

Indian Test Team
ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் இந்திய வீரர்கள் (BCCI)


கோலியின் புதிய உற்சாகத்திற்கான காரணத்தை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய போட்டியின்போது, இந்திய பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, கோலியின் காதல் மனைவி அனுஷ்கா சர்மா போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

அனுஷ்கா சர்மா, டெஸ்ட் போட்டியைப் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.Also Watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...