ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால்... விராட் ரூம் வீடியோவை வெளியிட்ட ரசிகரை கடுமையாக திட்டிய அனுஷ்கா சர்மா

உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால்... விராட் ரூம் வீடியோவை வெளியிட்ட ரசிகரை கடுமையாக திட்டிய அனுஷ்கா சர்மா

ரசிகரை கடுமையாக திட்டிய அனுஷ்கா சர்மா

ரசிகரை கடுமையாக திட்டிய அனுஷ்கா சர்மா

Virat Kohli Room Video | விராட் கோலியின் ஹோட்டல் ரூமை வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகரை அனுஷ்கா சர்மா கடுமையாக சாடி உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

    இந்த ஹோட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் அனுமதியின்றி நுழைந்து அவரின் ரூமை வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ விராட் கோலியின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவால் கோபமடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அதில், ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன்.

    Also Read : ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் 2 முக்கிய வீரர்களை தூக்க சென்னை அணி திட்டம்?

    ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும். இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என்றுள்ளார்.




     




    View this post on Instagram





     

    A post shared by Virat Kohli (@virat.kohli)



    விராட் கோலியின் இந்த பதிவை தொடர்ந்து அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அந்த ரசிகரை கடுமையாக திட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அனுஷ்கா தனது பதிவில், ரசிகர்கள் மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட சில சம்பவங்கள் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமானது. இது உங்கள் படுக்கை அறையில் நடந்திருந்தால் இதற்கான எல்லைக்கோடு எது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கிரவுன் பெர்த் ஹோட்டலில் இந்திய அணி தங்கியுள்ளது. இவ்வளவு பெரிய ஹோட்டலில், வீரர் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியம் மற்றும் பாதுகாப்பு மீறல் போன்றது. இதனால் ஹோட்டலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Anushka Sharma, T20 World Cup, Virat Kohli