ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி

ரமீஸ் ராஜா - அனுராக் தாகூர்

ரமீஸ் ராஜா - அனுராக் தாகூர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விளையாட்டுத் துறையில் இந்தியாவை யாரும் புறக்கணிக்க முடியாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்தாண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானிலும், அதன் பின்னர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும்வகையில் அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தானிற்கு வந்து விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்காது என்றார்.

இதையும் படிங்க: WATCH - பாண்டியா பிரதர்ஸ் உடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட தோனி: வைரல் வீடியோ!

இதுதொடர்பாக பதிலளித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், விளையாட்டு உலகில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தி என்றும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

First published:

Tags: BCCI, Pakistan cricket