நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்.. இந்திய அணிக்கு சிக்கல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்.. இந்திய அணிக்கு சிக்கல்
கோப்பு படம்
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகி உள்ளதால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் சர்மாக கணுக்கால் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடரில் இஷாந்த் சர்மாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய குறைந்தது 6 வாரங்களாகும் என்று மருத்துவ சிகிச்சையில் கூறப்பட்டுள்ளது.

எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இஷாந் சர்மா பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. இவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் இடம்பெறுவார் என எதிர்பாரக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் வெற்றிக்கு இளம் வீரர்களை விட அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்கு அதிகமாக இருக்கும். தவான், இஷாந்த் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள்  காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading