• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி.ஆர்.எஸ். முன்கூட்டியே வந்திருந்தால் அனில் கும்ப்ளே 1,000 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பார்: கவுதம் கம்பீர்

டி.ஆர்.எஸ். முன்கூட்டியே வந்திருந்தால் அனில் கும்ப்ளே 1,000 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பார்: கவுதம் கம்பீர்

கம்பீர்.

கம்பீர்.

யுவராஜ் சொல்வதை இந்த கோணத்திலிருந்து ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் பிட்ச் விவகாரத்தில் நான் யுவராஜ் கருத்துடன் ஒத்துப் போகமாட்டேன். பிட்ச் இரு அணிகளுக்கும் ஒன்றுதான்.

  • Share this:
    இப்போது உள்ளது போல் களநடுவர் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் 3வது நடுவர் டி.ஆர்.எஸ். முறை இன்னும் முன்னாலேயே வந்திருந்தால் அனில் கும்ப்ளே 1000 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பார் என்று முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    யுவராஜ் சிங் முன்னதாக அகமதாபாத் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்ததை கடுமையாக விமர்சித்து செய்திருந்த ட்வீட்டில், “2 நாட்களில் டெஸ்ட் முடிந்து விட்டது, இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்த பிட்ச் அல்ல. அனில் கும்ப்ளேயும், ஹர்பஜன் சிங்கும் இம்மாதிரி பிட்ச்களில் பவுலிங் செய்திருந்தால் ஆயிரம், 800 விக்கெட்டுகள் மட்டத்தில் நின்றிருப்பார்கள்” என்றார்.

    இந்நிலையில் யுவராஜ் சிங்கின் ட்வீட்டை ஆதரிக்கிறீர்களா? என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் கேட்ட போது, “ஆம்! இப்போது பிட்ச்கள் வித்தியாசமாக உள்ளன.   ஆனால் டீ.ஆர்.எஸ். ஒரு பெரிய பங்காற்றுகிறது.

    அனில் கும்ப்ளே, ஹர்பஜன் பவுலிங் போடும்போது டீ.ஆர்.எஸ். முறை இருந்திருந்தால் அனில் கும்ப்ளே 1000 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பார். ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பார். குறிப்பாக இந்தியாவில் ஆடும்போது பேட்-பேடு கேட்ச்கள், மட்டையின் உள்விளிம்பில் பட்டு கேட்ச் ஆதல் ஆகியவை அதிகம் அப்போது டி.ஆர்.எஸ். இருந்திருந்தால் நிச்சயம் கும்ப்ளே 1000 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் 700 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருப்பார்.

    யுவராஜ் சொல்வதை இந்த கோணத்திலிருந்து ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் பிட்ச் விவகாரத்தில் நான் யுவராஜ் கருத்துடன் ஒத்துப் போகமாட்டேன். பிட்ச் இரு அணிகளுக்கும் ஒன்றுதான். அஸ்வின் தனக்கு இப்படிப்பட்ட பிட்ச்கள்தான் வேண்டும் என்று கேட்கவில்லை, அணி நிர்வாகம்தான் கேட்கிறது, இப்படிப்பட்ட பிட்சில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் அஸ்வினுக்குத்தான் அதிகம்.”

    இவ்வாறு கூறினார் கவுதம் கம்பீர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: