தோனியை இந்த இடத்தில் இறக்குங்க, அதுதான் இந்திய அணிக்கு நல்லது - அனில் கும்ப்ளே அறிவுரை!

#AnilKumble unhappy with Team India, remains firm on #MSDhoni to bat at No.4 | இந்திய அணியில் 4-வது இடத்தில் எந்த வீரரை களமிறக்குவது என்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை.

news18
Updated: March 15, 2019, 7:57 PM IST
தோனியை இந்த இடத்தில் இறக்குங்க, அதுதான் இந்திய அணிக்கு நல்லது - அனில் கும்ப்ளே அறிவுரை!
அனில் கும்ப்ளே மற்றும் எம்.எஸ்.தோனி. (Twitter)
news18
Updated: March 15, 2019, 7:57 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை, அதனால் தோனியை இந்த இடத்தில் இறக்குவதுதான் நல்லது என சுழல் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.

2109-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து நாட்டு அணிகளும் தங்களது அணியை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை, இன்னும் நிலையான அணி இறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு, இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியா உடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

Virat Kohli, விராட் கோலி
ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)


அதில், 2-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி நிலையாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் எந்த வீரரை களமிறக்குவது என்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை.

கடந்த ஒரு சில ஆண்டுகளில் ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, யுவராஜ் சிங், ரஹானே, அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் சங்கர் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் சோதனை முயற்சியில் களமிறக்கப்பட்டனர். இதுவரை யாரும் அந்த இடத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

Anil Kumble, MS Dhoni, அனில் கும்ப்ளே, எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி மற்றும் அனில் கும்ப்ளே. (Twitter)


இந்நிலையில், சுழல் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, 4-வது இடத்திற்கு சரியான வீரர் யார் என தெரிவித்துள்ளார். “கடந்த இரு ஆண்டுகளில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது முதல் மூன்று பேட்ஸ்மேன்கள்தான். அதனால், 4-வது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும். 5-வது, 6-வது மற்றும் 7-வது இடத்திற்கு வேறு யார் களமிறங்கலாம் என பார்க்க வேண்டும்” என்று கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.

#IPL2019: சென்னைக்குப் புறப்பட்டார் தல தோனி!

சென்னையில் ஐபிஎல்: நாளை முதல் டிக்கெட் விற்பனை!

VIDEO: நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு.. உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்.. தொடர் ரத்து!

#IPL2019: தோனியா? கோலியா? 23-ம் தேதி தெரிந்துவிடும்!

Also Watch...

First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...