Home /News /sports /

அனில் கும்ப்ளே பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்.. அடுத்த கோச் யார்?

அனில் கும்ப்ளே பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்.. அடுத்த கோச் யார்?

அனில் கும்பிளே.

அனில் கும்பிளே.

அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Punjab, India
ஒரு பயிற்சியாளர் உத்திகளை வகுத்துத் தர முடியுமே தவிர வீரர்கள்தான் களத்தில் இறங்கி ஆட வேண்டும் களத்தில் கேப்டன் தான் சூழ்நிலைகளுக்கேற்பட் உத்திகளை வகுக்க வேண்டும், ஆனால் இப்போதெல்லாம் அணி சரியாக ஆடவில்லையா, தோற்கிறதா உடனே பயிற்சியாளர் மேல் கத்தி விழுகிறது.

அதுதான் பஞ்சாப் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளரான இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவுக்கு நிகழ்ந்துள்ளது.
அனில் கும்பிளே ஐ.பி.எல். தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

அதன் பிறகு நடந்த 3 சீசன்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் அந்த அணி 6-வது இடமே பிடித்தது. அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர்.

புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் வேட்டையில் இறங்கி இருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் விரைவில் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பயிற்சியாளரை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் பஞ்சாப் கிங்ஸின் வேலையாக இருந்து வருகிறது. 5 சீசன்களில் 5 பயிற்சியாளர்கள் மாறியுள்ளனர். சஞ்சய் பாங்கர், விரேந்திர சேவாக், பிராட் ஹாட்ஜ், மைக் ஹெஸ்ஸன், இப்போது கும்ப்ளே. 2020-ல் ஐபிஎல் அணிகளில் ஒரே ஒரு இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவாகத்தான் இருந்தார்.

கும்ப்ளே பயிற்சியில் 42 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 18-ல் வென்று 22ல் தோற்றது, 2020 முதல் ஐபிஎல் தொடரில் மிக மோசமான வெற்றி தோல்வி விகிதமாகும்.

அடுத்த பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கு இங்கிலாந்தின் இயான் மோர்கன் மற்றும் முன்னாள் இலங்கை அணி பயிற்சியாளர் பேலிஸ் உள்ளிட்டோரை அணி நிர்வாகம் தொடர்பு கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Published by:Saravana Siddharth
First published:

Tags: Anil kumble, IPL

அடுத்த செய்தி