• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 81 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை வீரர் செய்த அரிய சாதனை!

81 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை வீரர் செய்த அரிய சாதனை!

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேரா. (Twitter)

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேரா. (Twitter)

#AngeloPerera Achieves a Rare Double-double Century | 81 ஆண்டுகால அரிய சாதனையை பெரேரா சமன் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் நடந்த முதல்தர போட்டியில் இரு இன்னிங்சிலும் இரட்டை சதம் அடித்த ஏஞ்சலோ பெரேரா, தேசிய அணி நிர்வாகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

    கிரிக்கெட் போட்டிகளில் தினந்தோறும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு சில சாதனைகள் மிகவும் அரிதிலும் அரிதாக செய்யப்படும். அதில் ஒன்றுதான், ஒரு பேட்ஸ்மேன் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் அடிப்பது.

    Angelo Perera, ஏஞ்சலோ பெரேரா,
    ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஏஞ்சலோ பெரேரா. (Twitter)


    இலங்கையில் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிங்களேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிராக 5-வது வீரராக களமிறங்கிய நாண்டுஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் ஏஞ்சலோ பெரேரா, முதல் இன்னிங்சில் 203 பந்தில் 201 ரன்கள் விளாசினார்.

    அதேபோல், 2-வது இன்னிங்சில் 268 பந்தில் 231 ரன்கள் குவித்தார். இதன்மூலம், இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற அரிய சாதனையைப் படைத்தார்.

    Angelo Perera, ஏஞ்சலோ பெரேரா,
    81 ஆண்டுகால அரிய சாதனையை சமன் செய்த பெரேரா. (Twitter)


    முன்னதாக, 1938-ம் ஆண்டு இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் கென்ட் அணி பேட்ஸ்மேன் ஆர்தர் ஃபாக், இரு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசி இருந்தார். தற்போது, 81 ஆண்டுகால அரிய சாதனையை பெரேரா சமன் செய்துள்ளார்.

    தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரீஸைத் தாண்டாதீர்கள்: ஐசிசி ஃப்ரீ அட்வைஸ்!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: