Home /News /sports /

Andrew Symonds: சைமண்ட்ஸ் உடலை விட்டு அகலாமல் கண்ணீருடன் இருந்த அவரது செல்ல வளர்ப்பு நாய்

Andrew Symonds: சைமண்ட்ஸ் உடலை விட்டு அகலாமல் கண்ணீருடன் இருந்த அவரது செல்ல வளர்ப்பு நாய்

சைமண்ட்ஸ்

சைமண்ட்ஸ்

கார் விபத்தில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு அகால மரணமடைந்த 46 வயது ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸின் நாய் விபத்தில் உயிர் பிழைத்ததாகவும் அது தன் எஜமானன் சைமண்ட்ஸ் உடலை விட்டு நகர மறுத்து அங்கேயே கண்ணீருடன் இருந்ததாகவும் ஆஸ்திரேலிய ஊடகம் உருக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...

    டவுன்ஸ்வில் பகுதியில் ஒரு நதிப்பாலத்தின் முன்பு சாலையிலிருந்து விலகிய சைமண்ட்சின் கார் உருண்டு விபத்துக்குள்ளானதில் அவர் மரணமடைந்தார். முதலில் அவர் மட்டுமே காரில் இருந்ததாகக் கூறப்பட்டது, ஆனால் அவர் வளர்த்த செல்ல நாய்களும் அவருடன் இருந்தன என்றும் விபத்தில் இரண்டு நாய்களும் உயிர்தப்பியதில் ஒரு நாய் சைமண்ட்ஸ் உடலை விட்டு நகர மறுத்துள்ளது என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.

    இது தொடர்பாக நேரடி சாட்சியம் ஒருவர் கூறும்போது, “ஒரு நாய் மிகவும் உணர்ச்சிவயப்பட்டது, அதனால் சைமண்ட்ஸ் உடலை விட்டு நகர மறுத்தது. அவர் பக்கத்தில் நான் போய் உடலை அகற்றலாம் என்று செல்லும் போதெல்லாம் அது குரைத்தது. என்னுடன் வந்தவர் சைமண்ட்ஸை காரிலிருந்து இறக்கி அவரது இருதயத் துடிப்பை மீட்டெடுக்க முயன்றார். சைமண்ட்ஸுக்கு நினைவு இல்லை, நாடித்துடிப்பு சுத்தமாக போய்விட்டது” என்றார்.

    சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் ஒருவர் ‘சைமண்ட்ஸ் மது அருந்தியிருப்பதாகத் தெரியவில்லை’ என்று அந்த சந்தேகத்தையும் நிவர்த்தி செய்தார்.

    சைமண்ட்ஸ் மறைவினால் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போது ஆடும் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர், ஆனால அவருடன் தகராறு செய்து அவரது கிரிக்கெட் கரியரை முன் கூட்டியே முடித்த மைக்கேல் கிளார்க் இவர்களையெல்லாம் விட ஆழ்ந்த சோகத்திற்குச் சென்று விட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Andrew Symonds

    அடுத்த செய்தி