Home /News /sports /

Andrew Symonds - ‘சாலையிலிருந்து விலகி கார் உருண்டதால் சைமண்ட்ஸ் மரணம்- எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை'

Andrew Symonds - ‘சாலையிலிருந்து விலகி கார் உருண்டதால் சைமண்ட்ஸ் மரணம்- எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை'

கார் விபத்தில் சைமண்ட்ஸ் மரணம்

கார் விபத்தில் சைமண்ட்ஸ் மரணம்

ஷேன் வார்ன் இறப்பின் துக்கத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை நொறுங்கச் செய்யுமாறு மேலும் ஒரு அதிர்ச்சி மரணச் செய்தி தாக்கியுள்ளது, முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உதவிக்குக் கூட ஆளில்லாமல் இறந்துள்ளார், அவரை உயிரைக் காப்பாற்ற பாராமெடிக்ஸ் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

மேலும் படிக்கவும் ...

    சனிக்கிழமை இரவு அந்நாட்டு உள்ளூர் நேரம் 10.30 மணியளவில் டவுன்ஸ்வில் அருகே 50 கிமீ தொலைவில் சைமண்ட்ஸ் கார் விபத்துக்குள்ளானது. சைமண்ட்ஸ் ஆலிஸ் நதி பாலத்துக்கு அருகே ஹேர்வி ரேஞ்ச் சாலையில் பயணித்த போது சாலையிலிருந்து விலகிச்சென்ற கார் சாலையில் உருண்டது.

    விபத்து நடந்த இடத்துக்கு பாராமெடிக்ஸ் வந்தும் சைமண்ட்ஸ் உயிரை காப்பாற்ற முடியவில்லை, அவர் தனியாளாக இருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றது.

    2003, 2007 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதில் ஆல்ரவுண்ட் பங்களிப்பு செய்தவர் சைமண்ட்ஸ். பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 143 அதிரடி ரன்கள் இவரது கரியரை வடிவமைத்தது.

    சைமண்ட்ஸுக்கு லாரா என்ற மனைவியும் க்ளோ மற்றும் பில்லி என்ற குழந்தைகளும் உண்டு. ஷேன் வார்ன் இறந்த போது ‘உன்னை இனிமேல் பார்க்காமல் இருப்பேன் என்று நினைக்கும் போது என்னால் தாங்க முடியவில்லை, என் தலை கிறுகிறுக்கிறது’ என்று கூறிய சைமண்ட்ஸ் இப்போது அவரது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் கிரிக்கெட் உலகினை துயரத்தில் ஆழ்த்தி விட்டு மேலோகத்தில் ஷேன் வார்னுடன் இணைந்து விட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Andrew Symonds

    அடுத்த செய்தி