Home /News /sports /

லாங்கருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு, செலக்டரும் இவரே- 4 ஆண்டு கான்ட்ராக்ட்

லாங்கருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு, செலக்டரும் இவரே- 4 ஆண்டு கான்ட்ராக்ட்

ஆண்ட்ரூ மெக்டொனால்டு

ஆண்ட்ரூ மெக்டொனால்டு

ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நான்கு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர பயிற்சியாளர் மற்றும் மூன்று வடிவங்களுக்கான தேர்வாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    குழப்பாமான, சர்ச்சைக்குரிய ஒரு சூழ்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் லாங்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவருடனே ட்ராவல் செய்த ஆண்ட்ரூ மெக்டொனால்டு 4 ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2019 இன் பிற்பகுதியில் இருந்து மூத்த உதவியாளர் மற்றும் பந்துவீச்சு வழிகாட்டியாக இருந்த மெக்டொனால்ட், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவர் அணியை 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்ல செய்து டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸின் பாராட்டைப் பெற்றார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது, ஆனால் லாகூரில் நடந்த ஒரு டி20-ஐ வென்றது.

    ஆண்ட்ரூ மெக்டொனால்ட் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய ஓப்பனிங் கிடைக்காதவர், 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார், அதில் சோபிக்கவில்லை, இவர் எப்படி பயிற்சியாளர் ஆனார் என்பது ஒரு பெரும் புதிர்தான், கேப்டன் கமின்ஸின் கடைக்கண்பார்வையில் பதவி பெற்றார் போலும்.

    லாங்கரின் நான்கு வருட பதவிக்காலத்தில் மெக்டொனால்டு ஆஸ்திரேலியாவிற்கு பல சுற்றுப்பயணங்களில் பயிற்சியளித்துள்ளார், இதில் 2020 இல் இந்தியாவில் ஒரு ஒருநாள் தொடர், 2021 இல் நியூசிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட T20I சுற்றுப்பயணம் மற்றும் ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் உட்பட மெக்டொனால்டு பயிற்சியளித்துள்ளார்.

    மெக்டொனால்டு மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவில் தலைவர் ஜார்ஜ் பெய்லி மற்றும் மூன்றாவது தேர்வாளர் டோனி டோடமெய்டு ஆகியோருடன் மூன்று வடிவங்களுக்கும் தேர்வாளராக அமருவார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia, Cricket

    அடுத்த செய்தி