CRICKET ANDRE RUSSELL THANKS PM NARENDRA MODI FOR SENDING COVID 19 VACCINES TO JAMAICA MUT
பெரிய பெரிய பெரிய நன்றிகள் பிரதமர் நரேந்திர மோடி: கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக கிரிக்கெட் வீரர் ஆந்த்ரே ரசல் நெகிழ்ச்சி
ஆந்த்ரே ரசல்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய தூதருக்கும் பெரிய பெரிய பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசிகள் ஜமைக்காவுக்கு வந்துள்ளன, நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்.
ஜமைக்காவுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்பியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆந்த்ரே ரசல்.
இது தொடர்பாக டிவிட்டர் வீடியோவில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய தூதருக்கும் பெரிய பெரிய பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசிகள் ஜமைக்காவுக்கு வந்துள்ளன, நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்.
உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதை நாம் விரும்புகிறோம். ஜமைக்கா மக்கள் இதனை உண்மையில் வரவேற்றுள்ளனர். நம் இருநாடுகளும் நெருக்கத்துக்கும் அதிகமான உறவு கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்.
இவ்வாறு கூறினார் அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல்.
இந்தியா முதலில் 50,000 டோஸ்கள் கொரோனா தடுப்பு வாக்சினை ஜமைக்காவுக்கு அனுப்பியது. இதற்கு ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹால்னெஸ் நன்றி தெரிவித்தார். ஆஸ்ட்ரா ஜெனகாவின் கோவிஷீல்ட் வாக்சின் அங்கு நன்கொடையாக அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், வாக்சின் மைத்ரி திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் மே.இ.தீவுகளின் முன்னாள் நட்சத்திரங்கள், விவ் ரிச்சர்ட்ஸ், ரிச்சி ரிச்சர்ட்ஸன், ஜிம்மி ஆடம்ஸ், சர்வான் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
மார்ச்சில் ஆண்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு 1,75,000 டோஸ்கள் கோவிட் 19 வாக்சின் அனுப்பப்பட்டது. கனடாவில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் டொராண்டோவில் வாக்சின்களுக்காக நன்றி தெரிவித்து பெரிய பில்போர்டே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.