அம்பயரை கீழே தள்ளி சதத்தை கொண்டாடிய ஜாசன் ராய்! சிரிப்பால் அதிர்ந்த அரங்கம்

#ICCWorldCup2019 | #ENGvBAN | #JasonRoy | ஜாசன் ராய் சதமடிக்க ரன் ஓடிய போது குறுக்கே இருந்த அம்பயரை கவனிக்காமல் அவர் மீது இடித்து கீழே தள்ளினார்.

Vijay R | news18
Updated: June 8, 2019, 11:02 PM IST
அம்பயரை கீழே தள்ளி சதத்தை கொண்டாடிய ஜாசன் ராய்! சிரிப்பால் அதிர்ந்த அரங்கம்
ENGvBAN
Vijay R | news18
Updated: June 8, 2019, 11:02 PM IST
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் ஆர்வத்தில் அம்பயரை இடித்து கீழே தள்ளினார் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாசன் ராய்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டம்  கார்டிப்பில் நடைபெற உள்ளது. இதில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், பேரிஸ்டோவ் களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களை அவுட்டாக்க முடியாமல் வங்கதேச அணி பவுலர்கள் திணறினர். தொடக்க வீரர் ஜாசன் ராய் அதிரடியாக விளையாடி 153 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்தது.இந்த போட்டியில் ஜாசன் ராய் சதமடிக்க ரன் ஓடிய போது குறுக்கே இருந்த அம்பயரை கவனிக்காமல் அவர் மீது இடித்து கீழே தள்ளினார்.இதில் நிலைகுழைந்த அம்பயர் மைதானத்தில் சரிந்து விழுந்தார். பின் சுதாரித்த ஜோசன் ராய் அவர் கையைப் பிடித்து தூக்கிவிட்டார். உலகக் கோப்பை தெடாரில் ஜோசன் ராய் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.உலகக் கோப்பை தொடரில் அதிகம் ரன் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார் ஜேசான் ராய். முதலிடத்தில் 158 ரன்களுடன் ஸ்டிராஸ் உள்ளார்.

Also Read: பும்ராவை வீழ்த்திய நடிகை அனுபமா?

Also Read:  இங்கிலாந்தில் இப்புடியம் ஒரு கிரிக்கெட் மைதானமா! 'டான்டன்' வரலாறு

Also Read : அம்பையரின் மோசமான முடிவு... டென்ஷனில் தனுஷ் போட்ட ட்வீட்!

Also Read :உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு டி-வில்லியர்ஸ் மீண்டும் திரும்புவது சாத்தியமா?

Also Watch

First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...