ஜூன் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா 5 போட்டிகளிலும் வெல்ல முழு பங்களிப்பு செய்வேன் என்று காஷ்மீர் அதிவேக பவுல்ரும் சன் ரைசர்ஸ் ஐபிஎல் வீரருமான உம்ரன் மாலிக் கூறியுள்ளார்.
ஆனால் 5 போட்டிகளிலும் இவர் ஆடுவாரா என்பது தெரியவில்லை, அதற்குள் அவர் எப்படி இவ்வாறு கூற முடிகிறது என்பது தெரியவில்லை.
2021 ஐபிஎல் முதல் உம்ரன் மாலிக்கின் எழுச்சியை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள், அவர் ஓர் ஆண்டிற்குள் யாரும் எதிர்பார்க்காத உயரத்தை அடைந்தார். இந்த சீசனில் அவரது அணி போராடிய போது , அவர் தொடர்ந்து 150 கிமீ வேகம் வீசி பெரிய பேட்டர்களையெல்லாம் திக்குமுக்காடச் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் 157 KMPH வேகத்தைப் பதிவு செய்தார், பின்னர் அதை குஜராத் டைட்டன்ஸ் அணியின் லாக்கி பெர்குசன் முறியடித்தார்.
இந்நிலையில் உம்ரன் மாலிக் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “என் கவனம் ஸ்பீடு ரெக்கார்ட் குறித்து இப்போது இல்லை. நல்ல இடங்களில் பந்தைப் பிட்ச் செய்து என் நாடு 5 போட்டிகளிலும் வெல்ல உதவுவதே இப்போதைய குறிக்கோள்.
என்னுடைய உடல் வலுவை பராமரிக்க மணிக்கு 150 அல்லது அதற்கு மேல் வீசுவேன். எனக்கு முன்பாக சன் ரைசர்ஸுக்கு ஆடிய அப்துல் சமத் எனக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். நான் எப்போது அவருக்கு வீசினாலும் நான் ஸ்லோவாக வீசுகிறேன் என்பார் அப்துல்.
அதன் பிறகுதான் நான் அதிக வேகம் வீசினேன். ஜிம் மற்றும் முறையான பயிற்சிதான் எனக்கு உதவியது.” என்றார் உம்ரன் மாலிக்.
முன்னதாக பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரீடி உம்ரன் மாலிக் குறித்துக் கூறும்போது லைன் மற்றும் லெந்த் இல்லாத போது ஒரு பவுலருக்கு வேகம் தான் கைக்கொடுக்கிறது என்று சொன்னதை சில தரப்பினர் திரித்துக் கூற ஷாஹின் அப்ரீடி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார், பிறகு சிலபல பிரபலங்கள், அஃப்ரீடி தரக்குறைவாக எதுவும் கூறவில்லை, அவர் கூறியதை அவர் சொன்ன பொருளிலிருந்து பிரித்து எடுத்து வசைபாடியதாக விளக்கம் அளித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs South Africa