ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் அளிக்கும் இந்திய நிறுவனம்!

#Amul To Be Principal Sponsor For #AfghanistanCricketTeam In #ICC #WorldCup2019 | சர்வதேச அளவில் மிக விரைவில் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் அளிக்கும் இந்திய நிறுவனம்!
ஆப்கானிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி.
  • News18
  • Last Updated: May 8, 2019, 7:01 PM IST
  • Share this:
2019 உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்தியாவின் பிரபல நிறுவனம் ஸ்பான்சர் அளிக்கிறது.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.


cricket world cup, உலகக் கோப்பை
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை. (File)


இந்த தொடருக்கான, குல்பதின் நயிப் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் மிக விரைவில் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்தியாவின் பிரபல நிறுவனம் ஸ்பான்சர் அளிக்கிறது.


பிரபல இந்திய பால் உணவு பொருட்கள் நிறுவனமான அமுல் (Amul), ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளனர். வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

VIDEO: மொத்தமா வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்.. வைரலாகும் தோனியின் சிக்ஸர்!

தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: டெல்லி - ஹைதராபாத் பலப்பரீட்சை!

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading