முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘விராட் கோலிக்கு உடல் நலன் பாதிப்பா?’ – பார்ட்னர் அக்சர் படேல் சுவாரசிய பதில்

‘விராட் கோலிக்கு உடல் நலன் பாதிப்பா?’ – பார்ட்னர் அக்சர் படேல் சுவாரசிய பதில்

விராட் கோலி - அக்சர் படேல்

விராட் கோலி - அக்சர் படேல்

முதல் இன்னிங்ஸில் அக்சர் படேல் 113 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். 6 ஆவது விக்கெட்டிற்கு அக்சர் படேலும், விராட் கோலியும் இணைந்து 162 ரன்கள் சேர்த்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில் விராட் கோலி சதம் அடித்துள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அதுகுறித்து, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் படேல் சுவாரசிய பதிலை அளித்துள்ளார். டெஸ்டில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் கடைசியாக 2019 நவம்பர் மாதம் 22 ஆம்தேதி கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மேட்சில் சதம் அடித்திருந்தார். அதையடுத்து 40 மாதங்களுக்கு பின்னர் கோலி இன்று டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு இடைப்பட்ட நாட்களில் கோலி 41 இன்னிங்ஸ்களை டெஸ்டில் விளையாடியிருந்தார். இந்த போட்டிகளில் அவர் சதம் ஏதும் அடிக்காததால் அவர் மீது நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

அவை அனைத்தையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் சதத்தை அடித்து ஊதித் தள்ளியுள்ளார் விராட் கோலி. இந்த போட்டியில் உடல் நலன் குறைபாட்டை பொருட்படுத்தாமல் கோலி விளையாடியதாகவும், அவரது இந்த பண்பு தன்னை எப்போதும் ஈர்ப்பதாகவும் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கூறியிருந்தார். அவர் வெளியிட்டுள்ள தகவல் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய அக்சர் படேல் பதில் அளித்துள்ளார்.

அக்சர் படேல் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது- கோலிக்கு உடல் நலன் சரியில்லை என்று எனக்கு தெரியாது. ரன் எடுக்க அவர் ஓடிய விதத்தை பார்க்கும்போது அவருக்கு உடம்பு சரியில்லை என்று தோன்றவில்லை. இன்று வெப்பம் அதிகமாக இருந்தபோதிலும், அவர் மிக விரைவாக ஓடி ரன்களை சேர்த்தார். அவருடன் களத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முதல் இன்னிங்ஸில் அக்சர் படேல் 113 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். 6 ஆவது விக்கெட்டிற்கு அக்சர் படேலும், விராட் கோலியும் இணைந்து 162 ரன்கள் சேர்த்தனர்.

First published:

Tags: Cricket