‘பவுண்டரி முறை’ ஐசிசியை வறுத்தெடுத்த அமிதாப் பச்சன், யுவ்ராஜ் சிங்!

இங்கிலாந்து லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து.

‘பவுண்டரி முறை’ ஐசிசியை வறுத்தெடுத்த அமிதாப் பச்சன், யுவ்ராஜ் சிங்!
பவுண்டரி முறை
  • News18
  • Last Updated: July 16, 2019, 12:09 PM IST
  • Share this:
உலகக்கோப்பை தொடரில் பவுண்டரி முறையை விமர்சித்து நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, யுவ்ராஜ் சிங் ஆகியோர் விமர்சித்துள்ளனர். 

இங்கிலாந்து லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்களை எடுத்தது. 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற போது 1 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.


சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. 16 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது.

ஐசிசியின் இந்த பவுண்டரி முறையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாலிவிட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உன்னிடம் (ஐசிசி) ஒரு 2000 ரூபாய் நோட்டு இருக்கிறது, என்னிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு இருக்கிறது, நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க, அதற்கு ஐசிசி நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ள நீங்கள் தான் பணக்காரர் என்று ஐசிசி சொல்வது போல் ட்வீட் செய்து கிண்டல் செய்திருந்தார்.


இதோபோல் நடிகர், அரசியல் தலைவர் பரேஷ் ராவல், ‘ தோனியின் கையுறைகளை மாற்றுவதற்கு பதிலாக, ஐசிசி சூப்பர் ஓவர் விதிகளை மாற்றியிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ‘கிரிக்கெட்டில் சில விதிகளை மாற்றியமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்கிரிக்கெட் வீரர் ப்ரட் லீ, ‘ உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். யார் வெற்றி பெற்றது என்பதை தீர்மானிக்க இது ஒரு பயங்கரமான வழி. இந்த விதி மாற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், ‘இந்த விதிகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஐசிசியின் விதிகளை மதித்து இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள்Also watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்