இரண்டு கையாலும் பந்துவீசி அசத்தும் இந்திய பவுலர்!

Ambidextrous spinner #AkshayKarnewar | அக்‌ஷய் கர்ணிவார் பந்துவீசி வீடியோ பிசிசிஐ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. # IraniCup

news18
Updated: February 13, 2019, 5:54 PM IST
இரண்டு கையாலும் பந்துவீசி அசத்தும் இந்திய பவுலர்!
இரு கையாளும் பந்துவீசும் அக்‌ஷய் கர்ணிவார். (BCCI)
news18
Updated: February 13, 2019, 5:54 PM IST
இந்தியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார் தனது இரு கைகளாலும் பந்துவீசி அசத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவை பூர்வீகமாகக்கொண்ட சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார், தற்போது விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். இரானி கோப்பைக்கான போட்டியில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதி வருகின்றன.

Akshay Karnewar, அக்‌ஷய் கர்ணிவார்
விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார். (PTI)


நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய விதர்பா அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணி பேட்டிங் செய்தபோது, விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷய் கர்ணிவார், தனது வலது மற்றும் இடது கை என இரு கைகளாலும் பந்துவீசி அசத்தியுள்ளார். தான் பந்துவீச்சு முறையை மாற்றும் போது நடுவரிடம் தெரிவித்து பின்னர் வீசினார்.

Akshay Karnewar, அக்‌ஷய் கர்ணிவார்
இரு கையாளும் பந்துவீசும் அக்‌ஷய் கர்ணிவார். (Video Grab)


அக்‌ஷய் கர்ணிவார் பந்துவீசும் வீடியோ பிசிசிஐ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவைப் பார்க்க... http://www.bcci.tv/videos/id/7319/left-arm-right-arm-vidarbhas-ambidextrous-bowler
Loading...
இந்தியாவைப் பார்த்து காப்பி அடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...