கிரிக்கெட்டிற்கு யூ-டர்ன் போட்ட சி.எஸ்.கே. அணியின் முக்கிய வீரர்!

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ராயுடு இருந்தார்.

Web Desk | news18-tamil
Updated: August 30, 2019, 5:08 PM IST
கிரிக்கெட்டிற்கு யூ-டர்ன் போட்ட சி.எஸ்.கே. அணியின் முக்கிய வீரர்!
அம்பதி ராயுடு
Web Desk | news18-tamil
Updated: August 30, 2019, 5:08 PM IST
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்கிடைக்காத விரக்தியில் ஓய்வு அறிவித்த அம்பதி ராயுடு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வந்தவர் அம்பதி ராயுடு. சர்வசேத போட்டிகளில் இந்திய அணிக்காக 55 ஒரு நாள் போட்டிகளிலும் 6 டி20 போட்டியிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ராயுடு இருந்தார். ஆனால் அணியில் இடம்கிடைக்காத விரக்தியில் திடீரென ஓய்வு அறிவித்தார்.


தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளார். ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அம்பதி ராயுடு வரும் செப்டம்பர் 10ம் தேதி ஐதாராபாத் அணியில் இணைய தயாராகிவிட்டாதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு மெயிலும் அனுப்பி உள்ளார்.

கிரிக்கெட்டில் தான் மீண்டும் திரும்ப ஆதரவாக இருந்த சி.எஸ்.கே அணிக்கும், முன்னாள் வீரர் லக்ஷமன் மற்றும் நோய்ட் டேவிட் ஆகியோருக்கு அம்பாதி ராயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Watch : EXCLUSIVE:என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன்... தங்க மங்கை பி.வி.சிந்து

Loading...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...