ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்னதான் ஆச்சு? ரோகித் முதல் பாபர் வரை.. டி20ல் சொதப்பும் அணியின் கேப்டன்கள்!

என்னதான் ஆச்சு? ரோகித் முதல் பாபர் வரை.. டி20ல் சொதப்பும் அணியின் கேப்டன்கள்!

அனைத்து அணிகளின் கேப்டன்கள்

அனைத்து அணிகளின் கேப்டன்கள்

ஒரு கேப்டனும் அவர்கள் அணிக்கு பெரிய பங்களிப்பை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வழங்கவில்லை.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த ஒரு அணி கேப்டனும் சரியாக ஃபார்மில் இல்லாத ஒரு அரிய நிகழ்வு இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரங்கேறியுள்ளது.

  8வது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மற்ற 4 அணிகள் தகுதி சுற்றுப்போட்டியில் விளையாடி சூப்பர் -12 சுற்றுக்கு முன்னேறியது. இதில் கொடுமை என்னவென்றால் இரண்டு முறை டி20 சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி தகுதி சுற்றுப்போட்டியிலே வெளியேறி இந்த தொடரில் முதல் டிவிஸ்டை வைத்தது.

  இப்படி தொடரின் தொடக்கம் முதல் சூப்பர்-12 முடியும் வரை பல டிவிஸ்ட்டுகளை கொடுத்து வருகிறது. இப்படி டி20 உலகக் கோப்பை தொடரில் யார் யாரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்தார்களோ அவர்கள் அனைவரும் ஏமாற்றத்தையே திருப்பி அளித்தனர். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற அனைத்து அணிகளின் கேப்டன்களும் மிக மோசமான பார்மையே வெளிப்படுத்தினர். குறிப்பாக சூப்பர்-12 அணியில் இடம் பிடித்த 12 கேப்டன்களின் சரசரியே மொத்தமாக 17.84 ஸ்ரைக் ரேட் 107.02 என மிக மோசமாகவே உள்ளது. இப்படி இந்த தொடரில் எந்த கேப்டன் என்ன செய்தார்கள் என்பதை விரிவாக பார்போம்.

  ஆரோன் பின்ச்

  ஆஸ்திரேலியா:

  கேப்டன் ஆரோன் பின்ச்:

  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த முறை நடைபெற்ற டி20 உலககோப்பை கைப்பற்றி கொடுத்து ஆரோன் பின்ச் இந்த முறை அந்த அணியை அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் திரும்பி போனது. இந்த தொடரில் ஆரோன் பின்ச் 4 ஆட்டங்களில் வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

  ஜோஸ் பட்லர்

  இங்கிலாந்து  கேப்டன் ஜோஸ் பட்லர்:

  டி20 உலககோப்பை தொடரில் முதன் முறையாக கேப்டன் பதவியேற்றி இங்கிலாந்து அணியை தட்டு தடுமாறி அரையிறுதிக்கு முன்னேற்றி உள்ளர். எப்போழுதும் டி20 போட்டிகள் அதிரடியாக அடி ரசிகர்களை கவர்ந்த பட்லர் இந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே 73 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இருப்பினும் இந்த தொடரில் அவர் மொத்தமாக 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அடுத்து வரும் அரையிறுதி மாறலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  கேன் வில்லியம்சன்

  நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்:

  எந்த ஒரு பெரிய வெற்றியோ தோல்வியோ ஏற்பட்டாலும் அதனை பெரிதாக எடுத்துகொள்ளாமல் அதனை ஒரே மாதிரியான முகத்தை வைத்துகொண்டு அலட்டி கொள்ளாமல் இருப்பவர் தாம் வில்லியம்சன். இந்த உலககோப்பை தொடரில் முதன் அணியாக அரையிறுதிக்கூ அழைத்து சென்றாலும் அவர் மீது டி20 ஆட்டம் குறித்து பெரிய விமர்சனங்களே உள்ளது. ஆம் டி20 போட்டியில் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்ப்பது தான் இவர் மீதான விமர்சமனாக இருந்த நிலையில் அதனை அயர்லாந்து அணிக்கு எதிராக உடைத்தெரிந்தார். 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து சற்று ஆறுதலான இன்னிங்ஸை வெளிப்படுத்தினாலும் இந்த தொடரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

  ஷாகிப் ஆல் ஹாசன்

  வங்கதேசம் கேப்டன் ஷாகிப் ஆல் ஹாசன்:

  டி20 உலககோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷாகிப் ஆல் ஹாசன் பேட்டிங்கில் வெறும் 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் தேவையான நேரங்கில் விக்கெட்டை எடுத்து வங்கதேச அணிக்கு பெரிய பக்க பலமாகவே இருந்தார்.

  டசுன் சங்கா

  இலங்கை கேப்டன் டசுன் சங்கா:

  இலங்கை அணி இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட வலுவான அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை வென்று அனைவரது கவனத்தை ஈர்த்தாலும் இந்த டி20 உலககோப்பை தொடரில் தகுதிசுற்று போட்டியில் நமிபியா அணியுடன் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை படுதோல்வி அடைந்து வெளியேறியது. இருப்பினும் ஆல்ரவுண்டரான டசுன் சங்கா பேட்டிங், பந்துவீச்சு என சுமாரகவே கூட விளையாடவில்லை என்பது தான் அந்த நாட்டு ரசிகர்களுக்கும் இருக்கும் மனநிலையாகும்.

  முகமது நபி

  ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி:

  பொதுவாக வலுவான அணிக்கு மிகப்பெரிய டஃப் கொடுக்கும் அணியாக திகழ்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த முகமது நபி இந்த டி20 உலககோப்பை தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங்கில் படுமோசமாக விளையாடினார். இதனால் ஆப்கான் அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியதால் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார்.

  பாபார் ஆசாம்

  பாகிஸ்தான் கேப்டன் பாபார் ஆசாம் :

  பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுடன் ஏற்பட்ட தோல்வியால் டி20 உலககோப்பை தொடரில் இருந்தே வெளியேறும் நிலையில் இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்வியால் அதிஷ்டத்தால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இருப்பினும் அவரது பேட்டிங் குறித்து சமூக வலைதளங்களி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது பேட்டிங் சரசரி பவுலர்களை விட மோசமாக இருந்தது என்றே கூறலாம் அவரது சூப்பர்12 சுற்றில் 5 ஆட்டங்களில் மொத்தமாகவே மொத்தமாக 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

  ரோகித் சர்மா

  இந்தியா கேப்டன் ரோகித் சர்மா:

  இந்த டி20 உலககோப்பையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா படுமோசமான ஃபார்மில் தொடர்ந்து வருகிறார். தொடக்க வீரராக இறங்கி வரும் ரோகித் சர்மா இந்த தொடரில் முழுவதுமே 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அவர் ஸ்ரைக் ரேட் மற்றும் சரசரி மிக மோசமாகவே உள்ளதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் நன்றாக விளையாட கூடிய கேப்டனே இந்த மோசமான பார்மில் இருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

  இப்படி ஜிம்பாவே கேப்டன் எர்வின், நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வட்ஸ், அயர்லாந்து கேப்டன் அன்ரீவ் பல்பிர்னீ உள்ளிட்ட எந்த ஒரு கேப்டனும் அவர்கள் அணிக்கு பெரிய பங்களிபை இந்த டி20 உலககோப்பை தொடரில் வழங்கவில்லை.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: ICC, India captain Rohit Sharma, T20 World Cup