Home /News /sports /

கோலி ஆடினதுல பாதி கூட இந்த செலக்டர்ஸ்லாம் மொத்தமா ஆடியிருக்க மாட்டாங்க- கீர்த்தி ஆசாத் காட்டம்

கோலி ஆடினதுல பாதி கூட இந்த செலக்டர்ஸ்லாம் மொத்தமா ஆடியிருக்க மாட்டாங்க- கீர்த்தி ஆசாத் காட்டம்

1983 உ.கோப்பையில் ஆடிய வீரர் கீர்த்தி ஆசாத்

1983 உ.கோப்பையில் ஆடிய வீரர் கீர்த்தி ஆசாத்

கோலியை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கும் முன் அணித்தேர்வுக்குழுவினர் இந்த முடிவை சவுரவ் கங்குலியிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று 1983 உலகக்கோப்பை வென்ற அணியிலிருந்த முன்னாள் ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    கோலியை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கும் முன் அணித்தேர்வுக்குழுவினர் இந்த முடிவை சவுரவ் கங்குலியிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று 1983 உலகக்கோப்பை வென்ற அணியிலிருந்த முன்னாள் ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அனுபவமற்ற இந்த அணித்தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் அனைவருமே சேர்ந்து கோலி ஆடிய மேட்ச்களி பாதிக்கூட ஆடியிருக்க மாட்டார்கள் என்று கிண்டல் அடித்துள்ளார் கீர்த்தி ஆசாத்.

    நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்த கீர்த்தி ஆசாத், “கோலி ஒருநாள் அணி கேப்டன்சி முடிவை அணித்தேர்வுக்குழுதான் எடுக்க வேண்டுமெனில் அவர்கள் கங்குலியிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும். பொதுவாக என்ன நடைமுறை எனில், நானும் தேர்வுக்குழுவில் இருந்திருக்கிறேன், அணியைத் தேர்வு செய்த பிறகு வாரியத் தலைவரிடம் அது பற்றி விளக்கம் அளிப்போம்.

    அவர் பார்த்து ஓகே சொல்லி ,கையெழுத்திட்ட பிறகுதான் வெளி உலகுக்கு அறிவிக்கப்படும். இதுதான் வழக்கம். எனவே கேட்பனை மாற்றுகிறோம் என்றால் வாரியத்தலைவருக்கு எழுதி ஒப்புதல் பெற வேண்டும். விராட் கோலி இதனால் ஏமாற்றமடையவில்லை, ஆனால் தனக்கு தெரிவிக்கப்பட்ட விதத்தில் அவர் காயமடைந்திருக்கலாம்.

    கங்குலியிடம் போன பிறகு அவர் அதிகாரபூர்வமாக இல்லாமல் கூட அவரிடம் பேசியிருக்கலாம். அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் பெரிய ஆட்கள்தான். ஆனால் இவர்கள் ஆடிய மொத்த மேட்ச்களை கணக்கெடுத்தால் விராட் கோலி ஆடியதில் பாதி தேறுமா என்பதே கடினம்” என்றார் கீர்த்தி ஆசாத்.

    கங்குலி கூட இது குறித்து மீடியாக்கள் கேட்ட போது இதை பிசிசிஐ-யிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார், உண்மையில் என்னதான் நடந்தது, பிசிசிஐக்கு கொஞ்சம் வெளிப்படைத்தன்மை தேவை என்று பேசப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: Year Ender 2021- 2021- ஜோ ரூட்டின் ஆண்டு- டாப் 10 பேட்டர்கள்

    பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையில் தோற்றதையடுத்து முகமது ஷமியை கன்னாபின்னாவென்று ட்ரால் செய்ததை எதிர்த்து விராட் கோலி கடும் விமர்சனங்களை முன் வைத்தது கூட கோலியை தூக்கியதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் வேறு பார்வைகளை முன் வைக்கின்றன. கங்குலி இது குறித்து உண்மையைக் கூறினாலே தவிர உண்மையான காரணம் புதைக்கப்படும் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli

    அடுத்த செய்தி