முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்த அஷ்வின்!

டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்த அஷ்வின்!

அஷ்வின்

அஷ்வின்

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த டெஸ்டில் ஆடும் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஆல் ரவுண்டர் அஷ்வின் சமன் செய்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு அற்புதமாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாக ஆஸ்திரேலியா இருந்து வரும் நிலையில், இந்தியாவுடன் அந்த அணி படு தோல்வி அடைந்திருப்பது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

முதல் டெஸ்டில் அஷ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அந்த வகையில் இந்த டெஸ்டில் 31ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்பு இதே சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், அந்த சாதனையை அஷ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று ரவிந்திர ஜடேஜா 11ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை இந்த போட்டியில் கைப்பற்றியுள்ளார். உலக அளவில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 45 முறை 5 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஷ்வின் கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் வரும் 17ஆம்தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த டெஸ்டில் ஆடும் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket