ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்…

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்…

ரஷித் கான்

ரஷித் கான்

15 சர்வதேச அணிகளில் இடம்பெற்றுள்ள ரஷித் கான் 361 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அந்த வகையில் 491 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக ரஷித் கான் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரையொட்டி, ரஷித் கானை கடந்த 2021-ல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்தது. இதனை ஏற்க மறுத்த அவர், கிரிக்கெட் வாரியம் தன்னிடம் ஆலோசிக்காமல் பொறுப்பை அளித்தாக விளக்கம் அளித்திருந்தார். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்து அணி வெளியேறிய நிலையில், முகமது நபி தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஆப்கன் அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மிர்வாய்ஸ் அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரும் புகழைப் பெற்றவராக ரஷித் கான் உள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் பங்கேற்று சிறந்த அனுபவத்தை அவர் பெற்றிருக்கிறார். எனவே கேப்டனாக அவருடைய அனுபவம் ஆப்கன் அணிக்கு மிகுந்த பலனை கொடுக்கும் என்று கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.

அவரை மீண்டும் ஆப்கன் அணியின் கேப்டனாக நியமிப்பத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி. புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு மேலும் புகழை அவர் தேடித்தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.’ என்று கூறியுள்ளார்.

புதிய பொறுப்பு குறித்து ரஷித் கான் அளித்துள்ள பேட்டியில், ‘கேப்டன் என்பது மிகப்பெரும் பொறுப்பு. ஏற்கனவே ஆப்கன் அணிக்கு தலைமையேற்று செயல்பட்டிருக்கிறேன். அணில் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் எனக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது. அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சிப்போம். நாட்டிற்கு இன்னும் புகழைப் பெற்றுத்தர நாங்கள் உழைப்போம்’ என்று கூறியுள்ளார்.

ஆப்கன் அணிக்காக 74 டி20 போட்டிகளில் விளையாடி 122 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ரஷித் கான். டி20 ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 134 விக்கெட், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 128 விக்கெட், ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ரஷித் கான் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு…

இதைத் தவிர்த்து 15 சர்வதேச அணிகளில் இடம்பெற்றுள்ள ரஷித் கான் 361 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அந்த வகையில் 491 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலில் அஷ்வின், ஷ்ரேயாஸ் முன்னேற்றம்…

வரும் பிப்ரவரியில் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  விளையாடவுள்ளது.

First published:

Tags: Afghanistan