இலங்கை வீரரின் 23 ஆண்டுகால சாதனையை தகர்த்த ஆல்ரவுண்டர் 'பென் ஸ்டோக்ஸ்'

#ICCCricketWorldCup2019 | #ICCWorldCup2019 | #ENGvSA | ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா இந்த சாதனை புரிந்து உள்ளார்.

இலங்கை வீரரின் 23 ஆண்டுகால சாதனையை தகர்த்த ஆல்ரவுண்டர் 'பென் ஸ்டோக்ஸ்'
பென் ஸ்டோக்ஸ்
  • News18
  • Last Updated: May 31, 2019, 4:31 PM IST
  • Share this:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 23 ஆண்டுகால உலகக் கோப்பை சாதனையை தகர்த்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங்கில் 89 ரன்கள், 2 கேட்ச், 2 விக்கெட் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று அசத்தினார்.

இதன்மூலம் 23 ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஆல்ரவுண்டர் 80 ரன்கள், 2 கேட்ச், 2 விக்கெட் எடுத்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர் அரவிந்த டி சில்வா இந்த சாதனையைப் புரிந்து உள்ளார். அந்த சாதனையை தற்போது பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

Also Read : Video | #ICCWorldCup2019 பிரமிக்கவைத்த ஒரு கேட்ச்... மைதானத்தையே அதிர வைத்த பென் ஸ்டோக்ஸ்...!

Also Read : உலகக்கோப்பையில் டேவிட் வார்னர் விளையாடுவாரா?

Also Watch

First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading