ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னேறும்’

‘டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னேறும்’

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸ்

இங்கிலாந்து அணிக்குத் திரும்பிய அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு விதமான கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்களை அளித்துள்ளார். அதில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த 4 அணிகள் மட்டுமே தகுதி பெறும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இங்கிலாந்து அணிக்குத் திரும்பிய அதிரடி வீரர்  அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு விதமான கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்களை அளித்துள்ளார். அதில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த 4 அணிகள் மட்டுமே தகுதி பெறும் என்று அணிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி கடந்த உலகக்கோப்பையில் மண்ணைக்கவ்வியது. சமீபத்தில் நடந்த டி20 ஆசியக்கோப்பையிலும் மண்ணைக்கவ்வியது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன, எல்லைக்கோடுகள் முன்னால் கொண்டு வரப்பட்ட பவுண்டரிகள் கிடையாது, ஸ்பின் சாதக ஆட்டக்களம் இருக்காது, வேகப்பந்து ஆட்டக்களமாக இருக்கும் என்பதால் ஷார்ட் பிட்ச் பந்துகளில் இந்திய பேட்டர்களை காலி செய்ய வாய்ப்பும் உள்ளது.

இந்திய தொடக்க வீரர்களான ராகுல், ரோஹித் சர்மா சீரான முறையில் தொடங்குவதில்லை, இந்திய அணியின் பீல்டிங், டெத் பவுலிங் படுமோசமாக உள்ளது, ஆனாலும் இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்கிறார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

Also Read : இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு உத்தேச 11

கேள்விகளுக்குப் பதில் அளித்த ஹேல்ஸ் கூறும்போது, பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசும் போது பந்துவீச்சாளர்களுக்கு என்ன அறிவுரை கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு பவுண்டரிகள் அடிக்க விடாமல் சிங்கிள் அடிக்க விடுங்கள் என்று அறிவுரை கொடுப்பேன் என்றார்.

உலக கோப்பை தொடருக்கான அரை இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள் எல்லாம் பங்குபெறும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் உலகக்கோப்பை தொடருக்கான அரை இறுதிப் போட்டியில் மோதும் என்று பதில் அளித்திருந்தார்.

Published by:Raj Kumar
First published:

Tags: Cricket, England, T20 World Cup