ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!

இங்கிலாந்து அணியில் மீண்டும் அலெக்ஸ் ஹேல்ஸ்!

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸ்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி மூன்றரை ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த கிரிக்கெட் வீரர் ஹேல்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internation, Indiaenglandengland

  ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி மூன்றரை ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த கிரிக்கெட் வீரர் ஹேல்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஆண்களுக்கான எட்டாவது டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் உலகின் 16 முன்னணி அணிகள் கலந்து கொண்டன.

  விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சூப்பர் 12 சுற்றுகளுக்குப் பிறகு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அரையிறுதிப் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுக் கிழமையன்று இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த ஜானி பெய்ர்ஸ்டோவ் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால் ஹேல்ஸூக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கான தேர்வின் போது ஊக்க மருந்து சோதனையில் ஹேல்ஸ் தோல்வியடைந்தார். இதனால் அந்தப் போட்டியில் விளையாட ஹேல்ஜூக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

  தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  மீண்டும் உலக கோப்பை போட்டியில் இணைந்து விளையாடுவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ஹேல்ஸ்.

  2011ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமான அலெக்ஸ் ஹேல்ஸ், அந்த அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது. அந்த அளவுக்கு பலம் இழந்து கிடந்த அந்த அணியை நான்கே ஆண்டுகளுக்குள் மீண்டும் பலமிக்க அணியாக உருவாக்கிய வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸூக்கு முக்கிய பங்குண்டு. ஊக்க மருந்து சோதனை தோல்வியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஹேல்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார்.

  முன்னணி வீரர்களுடனும் தொடர்பில்லை. ஆனால்   தற்போது இங்கிலாந்து அணி ஹேல்ஸூக்கு மீண்டும் அணியில் விளையாடும் வாயப்பை வழங்கியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள டி-20 இறுதிப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது இந்திய அணி. இதனால் பாகிஸ்தானுடன் இங்கிலாந்து மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் அளவுக்கு பரபரப்பு இருக்காது என்றாலும், இந்தப் போட்டியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறக்கப்படுவார் என எதிர்பாா்ப்பு எழுந்துள்ளது

  Published by:Murugesh M
  First published:

  Tags: England, Sports