#WolrdCup2019: ஊக்க மருந்து சர்ச்சை... இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி நீக்கம்!

#AlexHales axed from England's #WorldCup squad after drugs ban | முன்னதாக, சொந்தக் காரணங்களுக்காக காலவரையின்றி கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. #WolrdCup2019

news18
Updated: April 29, 2019, 6:23 PM IST
#WolrdCup2019: ஊக்க மருந்து சர்ச்சை... இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி நீக்கம்!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். (Getty Images)
news18
Updated: April 29, 2019, 6:23 PM IST
ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

15 பேர் கொண்ட அணிக்கு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அணியில், ஆல்ரவுண்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருந்தார். பின்னர், சொந்தக் காரணங்களுக்காக காலவரையின்றி கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது.



ஆனால், ஊக்க மருந்து எடுத்துக்கொண்டதாக அலெக்ஸ் ஹேல்ஸ் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், போதை மருந்து எடுத்துக்கொண்டது உறுதி செய்யப்படவே அவருக்கு விளையாட 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. அத்துடன், அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் உடனான தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதுவரை, அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தேர்தல் எனக்கு மிகவும் ஸ்பெஷல்... ஏன் தெரியுமா? - சச்சின் டெண்டுல்கர் பதில்!

மல்யுத்தத்தில் அசத்தும் பஜ்ரங், வினேஷ் போகத்... கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!

ரசிகரின் முகத்தில் குத்திய கால்பந்து வீரர் நெய்மர்... வைரலாகும் வீடியோ!

நள்ளிரவில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது.. உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

எல்லை மீறிய ரோகித் சர்மாவுக்கு 15% அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

ரூ.40 கோடி மோசடி.. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது தோனி வழக்கு!

Also Watch...








தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...