'கொஞ்சம் கூட மூளையில்லை' பாக். கேப்டனை கடுமையாக விமரச்சித்த சோயிப் அக்தர்!

ICC World Cup 2019 | India vs Pakistan | Sarfaraz Ahmed | Shoaib Akhtar | வலுவான பேட்டிங் வரிசை வைத்துள்ள இந்திய அணியின் இலக்கை பாகிஸ்தானால் எப்படி சேஸிங் செய்ய முடியும்.

Web Desk | news18
Updated: June 17, 2019, 7:36 PM IST
'கொஞ்சம் கூட மூளையில்லை' பாக். கேப்டனை கடுமையாக விமரச்சித்த சோயிப் அக்தர்!
ICC World Cup 2019 | India vs Pakistan | Sarfaraz Ahmed | Shoaib Akhtar | வலுவான பேட்டிங் வரிசை வைத்துள்ள இந்திய அணியின் இலக்கை பாகிஸ்தானால் எப்படி சேஸிங் செய்ய முடியும்.
Web Desk | news18
Updated: June 17, 2019, 7:36 PM IST
இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸின் முடிவை சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பை தெடாரில் இறுதிப் போட்டியைவிட பரபரப்பாக பேசப்பட்டது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான். விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்த்த இந்தப் போட்டி பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள், கவனமாக செயல்படுங்கள் என பலர் பாகிஸ்தான் அணிக்கு அறிவுறுத்தி இருந்தனர். இவை அனைதை்தையும் பாகிஸ்தான் அணி கருத்தில் கொள்ளமால் செயல்பட்டது போல் இருந்தது.

இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது தான் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய சொதப்பலாக அமைந்தது. தரமான பேட்டிங் வரிசை கொண்டுள்ள இந்தியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியின் முடிவுக்குப் பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸின் இந்த முடிவை பலர் விமர்ச்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரும் சர்பராஸை கடுமையாக விமர்சித்துள்ளார். 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தது. அதே தவறை தான் தற்போது பாகிஸ்தான் அணியும் செய்துள்ளது. கொஞ்சம் கூட மூளையிள்ளாமல் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளார். வலுவான பேட்டிங் வரிசை வைத்துள்ள இந்திய அணியின் இலக்கை பாகிஸ்தானால் எப்படி சேஸிங் செய்யமுடியும். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சு தான்.

பாகிஸ்தான் முதலில் விளையாடி 260 ரன்கள் எடுத்திருந்தால் கூட, பவுலிங்கை கொண்டு இந்திய அணியை திணற வைத்திருக்க முடியும். அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை பதிவு செய்துள்ளதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Also Watch

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...