• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs NZ| 5 ஓப்பனர்களை டீம்ல எதுக்குப்பா எடுக்குறீங்க?- இந்திய டி20 அணி மீது எழும் கேள்வி

India vs NZ| 5 ஓப்பனர்களை டீம்ல எதுக்குப்பா எடுக்குறீங்க?- இந்திய டி20 அணி மீது எழும் கேள்வி

ஆகாட்ஷ் சோப்ரா

ஆகாட்ஷ் சோப்ரா

3 போட்டிகளுக்கு 5 ஓப்பனர்களை தேர்வு செய்துள்ளோம். எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்க முடியும்? ரோகித், ராகுல் ஆடத்தான் போகிறார்கள், ஏனெனில் அவர்கள் இருவரும் கேப்டன் வைஸ் கேப்டன்.

  • Share this:
    நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணித்தேர்வில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் இந்நாளைய கிரிக்கெட் கருத்தாளர்/எழுத்தாளருமான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஐபிஎல் தொடரில் கலக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் என்று ஒரு இளம்படையே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அணியில் பார்த்தோமானால் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் கே.எல்.ராகுல், இவர்கள் போக ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷன் என்று 5 ஓப்பனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தேவையில்லாத ஒரு அணித்தேர்வு என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    “இதுதான் நம் சிஸ்டத்தில் உள்ள அடிப்படை தவறு. நான் இதனை பேசத்தான் போகிறேன், ஏனெனில் எதிர்காலம் பற்றி பேச வேண்டியுள்ளது. ஒரு வீரரை அணியில் தேர்வு செய்தால் அவருக்கான இடம் இருந்தால்தான் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர்கள் அந்த இடத்தில் இறங்கி ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை.

    இப்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணித்தேர்வை எடுத்துக் கொள்ளுங்கள், ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய வீரர்களுக்கு சலுகை அளிக்கிறீர்கள் அது நல்லது. ஓப்பனராக இறங்கி ரன் எடுத்த வீரர்களை வேறு டவுனில் இறக்கினால் அது பயனற்றது. ஓபனராக ஒருவர் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார் என்றால் அவரைப்போய் இங்கு 4ம் நிலை, 5ம் நிலையில் இறக்குவதில் பயனில்லை.

    நியூசிலாந்துக்கு எதிராக டி20-யில் ரோகித் சர்மா கேப்டன், ராகுல் துணைக் கேப்டன் இவர்கள் ஆடத்தான் போகிறார்கள் எனும்போது இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற தொடக்க வீரர்களை ஏன் தேர்வு செய்கிறீர்கள்? தொடக்கத்தில் ஆடுவது போலவே எல்லா டவுனிலும் ஒருவர் ஆட முடியுமா?

    3 போட்டிகளுக்கு 5 ஓப்பனர்களை தேர்வு செய்துள்ளோம். எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்க முடியும்? ரோகித், ராகுல் ஆடத்தான் போகிறார்கள், ஏனெனில் அவர்கள் இருவரும் கேப்டன் வைஸ் கேப்டன். ஆடாமல் இருக்க முடியாது, பின்பு எதற்கு 5 ஓப்பனர்கள்?” என்று கேள்வி எழுப்பினார் ஆகாஷ் சோப்ரா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: